St Our Ceylon News: இலங்கைச் செய்திகள்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News
இலங்கைச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஜனவரி, 2026

அடித்தால் பதிலடிக்கு நாங்களும் அடித்தே தீருவோம் - லால்காந்த

எதிர்க்கட்சியில் இருப்பதை விட ஆட்சி செய்வது தனக்கு மிகவும் சௌகரியமானது என்றும், அரசியல் எதிரிகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும், பொருத்தமான தருணத்தில் பதிலடி கொடுப்பேன் என்றும் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த கூறினார். விழா வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அசோக ஹந்தகமவின் கூற்றுக்கு பதிலளித்த அமைச்சர்,

புதன், 14 ஜனவரி, 2026

'அஸ்வெசும' இல்லாத குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் 2026 இல் 6000 ரூபா 'சிஷ்யாதார'

சென்ற வருடம் 'அஸ்வெசும' உள்ள ஏழைக் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'சிஷ்யாதார' யாக ரூபா 6000 வழங்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.

இம்முறை 2026 இல் 'அஸ்வெசும' இல்லாவிட்டாலும் அதற்குத் தகுதி வாய்ந்த ஏழைக் குடும்பங்களிலுள்ள தகுதிவாய்ந்த மாணவர்களுக்கும் குறித்த 'சிஷ்யாதார' வழங்குவதற்கு அரசாங்கம் அமைச்சரவையில் முடிவுசெய்துள்ளது.

வியாழன், 4 டிசம்பர், 2025

பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல் சேகரிப்புக்கு தகவல் பத்திரம்

அசாதாரண மண்சரிவு மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பெருவெள்ளம் பல கிராமங்கள் மற்றும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்த சூழலில், மக்களின் பாதுகாப்பையும், ஆதரவையும் உறுதி செய்வதற்காக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் CNF ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை சேகரிக்கும் படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சனி, 30 ஆகஸ்ட், 2025

இஸ்பஹான் சாப்தீன் அவர்களின் ஊடகப் பணியைப் பாராட்டி...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மூத்த ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது, ஊடகப் பயிற்றுவிப்பாளரும், பத்தி எழுத்தாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தயாரிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இஸ்பஹான் சாப்தீன் அவர்களின் ஊடகப் பணியைப் பாராட்டி, பொன்னாடை

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு சரிவர அதிகரிக்கப்படவில்லை - ஜோசப் ஸ்டாலின்

 ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வை ரூபா 20000 இனால் அதிகரிக்குமாறு தாம் கோரியிருந்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.

    குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு. ஜோசப் ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடும்போது, இம்முறை 5000

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

‘கர்ப்பப் பை யுத்தம்’ – சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு

  அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் நிமல் அபேசிங்க, டாக்டர் ஷாபிக்கு எதிராக முடக்கி விடப்பட்ட இனவாதம் தொடர்பில் ‘கர்ப்பப் பை யுத்தம்’ (‘ජාතිවාදය ඇවිස්සූ ගර්භාෂ යුද්ධය’) எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்

    இனவாதத்தை கக்கிய ‘கர்ப்பப்பை

வியாழன், 30 ஜனவரி, 2025

இலங்கையின் eagle’s view point

இலங்கையின் உயரமான கிராமம், முழுமையாய் சுற்றிபார்க்க 500 ரூபா!

அண்மையில் மீள்கட்டமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள eagle’s view point இலங்கையின் உயரமான கிராமமாக கருதப்படும் நுவரெலியாவின் சாந்திபுரவில் அமைந்துள்ளது.
முழுமையாக இப்பகுதியை சுற்றிபார்க்க இலங்கையர் பெரியவருக்கு 500 ரூபா, சிறுவர்களுக்கு 200 ரூபா, வெளிநாட்டவருக்கு

புதன், 29 ஜனவரி, 2025

வைத்தியர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

MD Dermatology part 2 பரீட்சையில் Dr MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) சித்தி

Dr MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) அவர்கள் தோல் வைத்திய நிபுணருக்கான (MD Dermatology) கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து MD Dermatology part 2 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

காத்தான்குடி-04 ஊர் வீதியில் வசித்துவரும் அல்ஹாஜ் PM காரிதீன்,ஹாஜியானி ஆயிஷா பீபி தம்பதிகளின் மகளும் அல்ஹாஜ் MIM. ஜாமில் BSc(Hons), PGDE (Merit) அவர்களின் மனைவியுமாவார்.
தனது ஆரம்பக்கல்வியை மட்/மத்/மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை காத்தான்குடி தேசிய பாடசாலையிலும் MMV கற்று வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கிழக்கு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் ஊடாக Clss சித்தியுடன் வைத்தியரானார்.
2022ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் PGIM

திங்கள், 27 ஜனவரி, 2025

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெலிகம -  முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை 11 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை அடைந்து சித்தியடைந்துள்ளனர்.

அவர்களின் பெயர்கள் வருமாறு - 

M.A. Aafiya Hayam -163

A.M.Umaima Maryam- 163

F.A.Aqleema -159

M.R.Hafsa -158

புதன், 22 ஜனவரி, 2025

வைத்தியர் அர்ஜுனாவை கைது செய்யக் கோரி கட்டளை

 

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனாவைக் கைது செய்து, சட்டத்தைச் செயற்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. 

மேலும் இதுதொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றிற்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது. 

செவ்வாய், 21 ஜனவரி, 2025

பாடசாலை மாணவர்களுக்கு 3000 ரூபா வவுச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு காலணி வாங்குவதற்கு 3000 ரூபா வவுசர் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

250 ஐ விட குறைவான எண்ணிக்கையிலுள்ள 6000 பாடசாலைகளின் 650000 மாணவர்களுக்கும் 250க்கு குறைவான மாணவர்கள் என்ற வகையில் உள்ளடங்காத ஏனைய தோட்டப்புறப் பாடசாலைகளின் 140000 மாணவர்களுக்கும் விசேட தேவை கொண்ட பிள்ளைகள் பயிலும் 28 பாடசாலைகளில் 2300 மாணவர்களுக்கும்

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

போலிப் பட்டம் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஆப்பு


 போலிப் பட்டங்கள் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.

கல்வித் துறை சார்ந்த கல்விமாணி, பட்டப் பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணி, பட்டப் பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என பல பாடநெறிகளை ஊர் பெயர் தெரியாத பல நிறுவனங்கள் வழங்குவதாக விளம்பரங்கள் காணக் கிடைக்கின்றன. கலாநிதி பட்டம் வழங்கும் நிறுவனங்களும் மலிந்துவிட்டன.

சில நிறுவனங்கள் ஒரு சில வாரங்களில்/

வெள்ளி, 10 ஜனவரி, 2025

ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் பசான் அமரசேன இன்று (ஜனவரி 9) நிராகரித்தார்.

செவ்வாய், 7 ஜனவரி, 2025

கௌசல்யாவின் சலத்தை எடுத்துத் தருகிறேன். தலையில் தௌித்துக் கொள்ளுங்கள் - வைத்தியர் அர்ச்சனா

கௌசல்யாவின் சலத்தை ஒரு குப்பியில் எடுத்துத் தருகிறேன். அதனை கம்பவாரிதி சிவ... சிவ எனக்கூறித் தினமும் தலையில் தௌித்துக் கொள்ளட்டும் என, பாராளுமன்ற உறுப்பினரும், வைத்தியருமான அர்ச்சுனா கூறியுள்ளார்.

கௌசல்யாவை கம்பவாரிதி ஐயா அவர்கள் விமர்ச்சித்ததற்குப் பதிலாகத்தான் வைத்தியர் அர்ச்சுனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Srilanka Pen Club அமைப்பின் நான்காவது தேசிய மாநாடு

கடந்த 2025.01.05 ஞாயிறு ,ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பான Srilanka Pen Club அமைப்பின் நான்காவது தேசிய மாநாடு திருகோணமலை ஜூபிலி மண்டபத்தில் அதன் ஸாதாபகத் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.

நாட்டின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் எண்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து

புதன், 1 ஜனவரி, 2025

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான நீதிமன்றின் தீர்ப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று

செவ்வாய், 31 டிசம்பர், 2024

மாணவர்களில் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் உதவி வழங்குவதிலும் பாடசாலைப் பொருட்களின் வரிகளை நீக்குங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர்


அடிப்படை வசதிகளுக்கான கட்டணங்களைக்கூட கட்டவியலாத நிலைமைக்கு உள்ளாகியுள்ள இந்த நாட்டில் பாடசாலை மாணவர்களில், மிகச் சிறியதொரு தொகையினருக்கு உதவி வழங்குவதற்குப் பதிலா, அரசாங்கம் உடனடியாக நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் நன்மை பெரும் பொருட்டுபாடசாலை உபகரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தலைவர் பிரியந்த பிரனாந்து குறிப்பிட்டார். 

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் நிற்கும்போது, அன்றைய அரசாங்கத்திற்காக ஆசிரியர்,

திங்கள், 30 டிசம்பர், 2024

அரசாங்கத்தின் நியமனத்திற்கு எதிராக எதிர்ப்பு

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர் ஜயங்க திலகரத்ன, அதற்கு மேலதிகமாக கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையின் வதிவிட பிரசவ மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விசேட வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறைக்கு முரணான வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையினால் இந்த நியமனத்திற்கு பிரசவ மற்றும்