St Our Ceylon News: வகவத்தின் 111 ஆவது கவியரங்கு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

திங்கள், 12 மே, 2025

வகவத்தின் 111 ஆவது கவியரங்கு

பௌர்ணமி தோறும் கவிதை தாகம் தீர்க்கும் வலம்புரி கவிதா வட்டத்தின் 111 ஆவது கவியரங்கு இன்று 12/05/2025 திங்கட்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கத்தாரிலிருந்து இலங்கைக்கு விடுமுறையில் வந்திருக்கும் கவிஞர் மெய்யன் நடராஜ் கவியரங்கினை தலைமையேற்று நடாத்தினார்.
வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்திய நிகழ்வுக்கு ஸ்தாபக உறுப்பினர் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனி முன்னிலை வகித்தார். செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரையையும், பொருளாளர் ஈழகணேஷ் நன்றியுரையையும் வழங்கினர்.
அண்மையில் மறைந்த இலக்கிய ஆளுமை காத்தான்குடி பாத்திமா அவர்களை நினைவுகூர்ந்து மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.
கவிஞர் மெய்யன் நடராஜின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் கவிஞர்கள் வெலிமடை ஜஹாங்கீர், ராஜா நித்திலன், கலேவெல ராஜன் நஸீர்தீன், வத்தளை எம். சிவசண்முகம், சிந்தனைப்ரியன் முஸம்மில், ஆர். தங்கமணி, வாழைத்தோட்டம் எம். வஸீர், அருந்தவம் அருணா, தி. ஸ்ரீதரன், இறைஞானக்கவி ரமீஸ் பீர் முஹம்மத், என். பி. எம். தஸ்லீம், இ. கலைநிலா, கிண்ணியா அமீர் அலி, மினுவன்கொட ஏ. சிவகுமார், பரீஹா பாரூக், ஏ.கே. இளங்கோ, மாத்தளை கமால், ஜொயெல் ஜோன்சன், எம். பி. எஸ். பாலா ஆகியோர் கவிதை பாடினார்.
சபையை பொறியியலாளர் சு. ஜெகதீஸ்வரன், பிறைக்கவி முஸம்மில், கவிதா இளங்கோ, தமிழ் இளங்கோ, எம்.ஆர்.எம். முஸம்மில், அமல்பாண்டி, எம்.எஸ்.எம். ஜின்னா போன்றோர் அலங்கரித்தனர்.


































படங்கள் - எம்.பி.எஸ். பாலா, முஹம்மத் நசார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக