15 ஆயிரம் உயிர்களை பறித்த ரணிலின் பட்டலந்த வதை முகாம் :
நினைத்தாலே உடல் நடுங்கும் சித்திரவதை -கொலை -கற்பழிப்பு
[தொடர் -01 ]
பட்டலந்த வதை முகாம்.
அண்மையில் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விடயம் இது.
ரணில் விக்ரமசிங்கவால் இயக்கப்பட்டது.
சந்திரிக்காவின் ஆட்சியில் அம்பலமானது.
15 ஆயிரம் உயிர்களை பறித்தது.
சித்திரவதை -கற்பழிப்பு -கொலை.
இப்படி எல்லாம் அங்கே...!!!
இப்படியான கொடூரம் ஏன் ...???
இந்த முகாம் உருவாக்கப்பட்டது ஏன்...???
விரிவாகப் பார்ப்போம் இத்தொடரில்...
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் திட்டம் வகுக்கிறது அப்போதைய அரசு.
ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசு.
இதற்குள் மூக்கை நுழைக்கிறது இந்தியா.
தீர்வு என்று வரும்போது அது இந்தியாவின் தீர்வாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் அந்நாட்டின் ஆதிக்கம் இலங்கையில் நிலைத்திருக்கும்.
இந்தியாவின் தேவை அதுவொன்றே...
இலங்கையில் போர் நிற்க வேண்டும்.இலங்கை செழிக்க வேண்டும் என்ற அக்கறையெல்லாம் இந்தியாவுக்குக் கிடையாது.
ஆதிக்கம் ஒன்றே இலக்கு.
இலங்கையைக் கைக்குள் போட வேண்டும்.தனது நாட்டுக்குத் தேவையானவற்றை இலங்கையில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்காகத்தான் புலிகள் இயக்கத்தையே இங்கு உருவாக்கியது இந்தியா.
போரோ -சமாதானமோ இந்தியாவின் விருப்பப்படியே அமைய வேண்டும்.
அந்த அடிப்படையில்தான் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கிறது இந்தியா.ஜே.ஆரின் ஆட்சியில்...
அதுதான் வடக்கு -கிழக்கு இணைப்பு.மாகாண சபைத் தேர்தல் முறைமை.
முழு வடக்கு -கிழக்கையும் கேட்கும் புலிகளுக்கு -அதைத் தனி நாடாகக் கேட்கும் புலிகளுக்கு இது குறைந்த பட்ச அளவே.
இதனால் இதை எதிர்க்கிறார்கள் புலிகள்.
மறுபுறம்.சிங்கள சமூகமும்.
ஆம்..அவர்களும் எதிர்ப்பு.
இருந்தாலும் இதில் -இந்த புதிய திட்டத்தில் உறுதியாக இருக்கிறது இலங்கை அரசு.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்து.ஜூலை 29,1987இல்...
மாகாண சபை முறைமை -வடக்கு -கிழக்கு இணைப்பு எல்லாம் அதில்...
இதை எதிர்க்கிறார்கள் மக்கள்.தென்னிலங்கை மக்கள்.
குறிப்பாக,ஜேவிபி.
நாடெங்கும் போராட்டம் -ஆர்ப்பாட்டம்.
அடக்குகிறது அரசு.வன்முறைமூலம்.
ஆயிரக் கணக்கில் மக்கள் பலி.
வன்முறைக்கு வன்முறையே பதில்.
அடிக்கு அடி.உதைக்கு உதை.
இதுதான் ஜேவிபி ஸ்டைல்.
ஏந்துகிறது ஆயுதங்களை.இறங்குகிறது களத்தில் - ஆயுதப் போராட்டத்தில் - - - -வன்முறையில் -
அரசுக்கு எதிராக -அரசின் வன்முறைக்கு எதிராக...
ஒருபுறம் புலிகள்.மறுபுறம் ஜேவிபி.
இரண்டுமே அரசுக்கு எதிராக - பெரும் தலையிடியாக..
பற்றி எரிகிறது நாடு.
அடக்க வேண்டும் -ஜேவிபியை அடக்க வேண்டும்.
முன்வைக்கப்படுகிறது ஒரு யோசனை.
அதுதான் பட்டலந்த வதை முகாம் யோசனை.ஜனவரி முதலாம் திகதி 1988 இல்...
அன்றிலிருந்தே ஆட்டம் ஆரம்பம் - அரசின் ஆட்டம் - வன்முறை ஆட்டம்.
அக்காலப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட முகாம்கள்.தடுப்பு முகாம்கள்.கைது செய்யப்படும் போராளிகளைத் தடுத்து வைப்பதற்காக...
பெயர்தான் தடுப்பு முகாம்கள்.ஆனால்,எல்லாமே வதை முகாம்கள்.
அவற்றுள் பிரபல்யமானது பட்டலந்த முகாம்தான்.
அதற்குக் காரணம்....???
ரணில் விக்ரமசிங்க அதை இயக்கியமைதான்.
சும்மா அல்ல.
அங்கேயே தங்கி - வேலை செய்து...
அவரின் உத்தியோகபூர்வ விடுதி அதற்குள்தான்.ஓய்வு இல்லம்.
அந்த வளாகத்துக்குள்.
குழுவொன்று உருவாக்கப்படுகிறது இதற்காக - ஜேவிபி ஆட்களைத் தூக்குவதற்காக - தூக்கி சித்திரவதை செய்வதற்காக - சித்திரவதை செய்து கொல்வதற்காக...
பொலிஸ் - இராணுவம் அடங்கலாக...
இது ரகசிய குழு.
இதற்குத் தலைமை ASP டக்ளஸ் பீரிஸ் .
இதற்கு மேலதிகமாக சில ஆயுதக் குழுக்களும் களத்தில்.
ப்ரா [ PRRA ] - கொல கொட்டி - கஹ கொட்டி - கஹ பலலு போன்றவை.
சிக்கியவர்கள் அவ்வளவுதான்...
கண்கள் கட்டப்பட்ட நிலையில் இந்த முகாமுக்குக் கொண்டுவரப்படுவர்.
பிறகு என்ன...
சித்திரவதை - கொலை.
சொல்லொண்ணா சித்திரவதை.
நிர்வாணமாக்கி - தலைகீழாய் தொங்கவிட்டு - கண்களுக்குள் மிளகாய் தூளிட்டு -கால் விரல்களில் ஆணி அடித்து...
அடி...அடி மேல் அடி...இடைவிடா அடி.
24 மணி நேரமும் தொங்கிய நிலையில்தான்...
இரண்டு சந்தர்ப்பங்களில் மாத்திரம்தான் கீழ் இறக்கப்படுவர்.
சாப்பிடுவதற்காக - மலசலகூடம் செல்வதற்காக...
அதுபோக...
எந்நேரமும் தொங்கிய நிலையில்தான்...
தாங்க முடியா வலி.அடக்க முடியா பசி.
அப்போ உணவு...???
ஒரு நேரம் மட்டுமே...!!!
காலையில் மாத்திரம்.10 மணிக்கு.அதுவும் கொஞ்சம்தான்.
வாங்கும் அடிக்கே போதா அது.
அதிக தடவைகள் கெட்டுப் போன உணவுதான்.
உண்ணவும் முடியாது.தவிர்க்கவும் முடியாது.
உண்டாலும் உடனே ரிடேர்ன்.போன வழியாலேயே...
நிற்பது தலைகீழாய் அல்லவா...!!!
உண்ட உடனேயே தலைகீழ்.செமிக்கும் முன்பே தலைகீழ்...
உண்ணும்போது மட்டுமே ஓய்வு.
உண்டு முடிந்ததும் மீண்டும் தலைகீழ்.
மீண்டும் அடி - மீண்டும் இடி - மீண்டும் உதை - மீண்டும் வதை.
சிலர் தலைகீழாய்...சிலர் தர்மச் சக்கரத்தில்...
அதுவும் ஒருவகை தண்டனைதான்.தர்மச் சக்கர தண்டனை.
பெரிய சக்கரம் - மேசை மின் விசிறிபோல்...
அதில் கட்டி வைத்துத்தான் வதை.
அதைச் சுழற்றுவதுதான் தண்டனை.
அதைச் சுழற்ற...வேகமாய்ச் சுழற்ற...
தலை சுற்றும்.உலகமே சுற்றும்.
ஒரே நேரத்தில்..நூற்றுக்கு மேற்பட்ட கைதிகள்.
ஒரே நேரத்தில்...அத்தனை பேருக்கும் சித்திரவதை.
ஒன்றாய் ஒலிக்கும் மரண ஓலம்.இடைவிடா ஓலம்.
அப்பகுதியே அதிரும்.
அடிப்பவர்களின் காதுகளே வெடிக்கும்.
இதனால் வாய்க்குள் துணி.எல்லோரது வாய்க்குள்ளும்.
இப்போதும் கேட்கிறது அந்த ஓலம்.அந்த இடத்தில் - அந்த முகாமில்...
அது ஆவிகளின் ஓலம்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா...
தொடரும் ...!!!
[ ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக