St Our Ceylon News: சஞ்சீவயின் கொலை : உண்மையான காரணம் இதுதான்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

புதன், 19 மார்ச், 2025

சஞ்சீவயின் கொலை : உண்மையான காரணம் இதுதான்

கணேமுள்ள சஞ்சீவயின் கொலை...!!!

பரபரப்பு இன்னும் அடங்கவில்லை..
இக்கொலைக்கான உண்மையான காரணம் என்ன...???
இதைச் செய்தது யார்...???
விரிவாக இத்தொடரில்...!!!
பாதாள உலகின் அரசனாக -God Father ஆக வர வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர்தான் இந்த சஞ்சீவ...
அதற்காக அவர் செய்த அநியாயங்கள் ஏராளம்.
கொலை - கொள்ளை -கப்பம் -ஒப்பந்தக் கொலை -போதைப் பொருள் வர்த்தகம் இப்படி ஏராளம் ...
கொழும்பில் பல சம்பவங்கள்.
தாவுகிறார் அங்கிருந்து.வேறு இடத்துக்கு...
கம்பஹாவுக்கு...
முழு கம்பஹாவையும் கைக்குள் போடும் திட்டத்தோடு...
அதற்கேற்ப அங்கும் பல சம்பவங்கள்.
கண்மூடித்தனமான கொலைகள்.
ஒன்றுமறியா அப்பாவிகளும் கொலை.
இந்த நிலையில்...!!!
கிறவள் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள் இருவர்.
ஒருவர் ஹீனதியன அசித.
அடுத்தவர் கழு காமினி.
இருவரும் பாதாள.
இருவருக்கும் இடையில் போட்டி-தொழில் போட்டி-கடும் போட்டி.
இதன் விளைவு ...???
சுட்டுக்கொல்லப்படுகிறார் காமினி.
சிறை செல்கிறார் அசித.
இதனால்,வீழ்கிறது இடைவெளி இத்தொழிலில்..
கிரவல் தொழிலில்...
அவ்விடத்தைப் பிடிக்கிறார் பஸ் பொட்டா [ pas podda ]
அவரும் பாதாலதான்...
இதனால் பஸ் பொட்டாவிடம் கப்பம் கோருகிறார் அசித.சிறையில் இருந்தவாறே..
மறுக்கிறார் பொட்டா.
பொட்டாவின் பிள்ளையைக் கடத்தப் போவதாக மிரட்டுகிறார் அசித.
அதற்கும் மசியவில்லை பொட்டா.
உக்கிரமடைகிறது மோதல் இருவருக்குமிடையில்.அன்றிலிருந்து...
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதற்கு ஒரே வழி.அசிதவைப் போட்டுத் தள்ளுவதுதான்.
அப்போதுதான் இந்த வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைக் கையில் எடுக்க முடியும்.
தனி ஒருவனாக நிற்க முடியும்.
முடிவெடுக்கிறார் பொட்டா.
ஆனால்,அது முடியாது.
காரணம்...????
அசித உள்ளே...
சிறைக்குள்ளே...நீர்கொழும்பு சிறையில்..
இருந்தாலும்,வழிகள் உண்டு.
இரண்டு வழிகள்.
ஒன்று நீதிமன்றில் வைத்துப் போடுவது.
அடுத்தது,நீதிமன்றம் செல்லும் வழியில் வைத்துப் போடுவது..
தெரிவு செய்கிறார் இரண்டாவது வழியை...
2005 டிசம்பர் மாதம் -26ஆம் திகதிதான் அந்த சம்பவம்.
நீர்கொழும்பு நீதிமன்றுக்கு அழைத்து வருகிறார்கள் அசித்தவை.விசாரணை ஒன்றுக்காக...
பொட்டாவின் திட்டப்படி...
இடைமறிக்கப்படுகிறது பஸ்.சிறைச்சாலை பஸ்.
கம்பஹா அஸ்கிரிய கருப்பு பாலம் அருகே.டிப்பர் ஒன்றைக் குறுக்கே நிறுத்தி..
பஸ் நிற்க...
பறக்கின்றன புல்லட்கள்.அந்த பஸ்ஸை நோக்கி..
ஆம்...
சுடுகிறார்கள் மறைந்திருக்கும் துப்பாக்கிதாரிகள்.
அதிர்கிறது அப்பகுதியே...!!!
இருந்தும்,தோல்வியில் முடிகிறது அந்த ஒபரேஷன்.
எதுவும் ஆகவில்லை அசிதவுக்கு.
உயிர் தப்புகிறார்.
அதிகாரிகள் மூவர் பலி.சிறை அதிகாரிகள்.
கைதாகிறார் பொட்டா.
இருந்தும்,சிறைக்குள்ளேயே மரணிக்கிறார் அசித.
வெளியே வருகிறார் பொட்டா.சில காலம் கழித்து...
இப்போது அவருக்கு யாரும் போட்டியில்லை.
கொடி கட்டிப் பறக்கிறார் வர்த்தகத்தில்..அந்த கிரவல் வர்த்தகத்தில்..
உதவிக்கு கணேமுள்ள சஞ்சீவ வேறு...
ஆம்...
பொட்டாவின் நெருங்கிய நண்பன் அவர்.
இதனால் -அச்சத்தால் ..எவரும் போட்டியில்லை.
இந்த நிலையில்தான்...
இதற்குள் நுழைகிறார் -போட்டிக்கு வருகிறார் ஒருவர்.
.அவர் கெஹல்பத்தர பத்ம.
அவரது தந்தை ஒரு வர்த்தகர்.
பத்மயும் வர்த்தகத்தில்...
அதில் ஒன்றுதான் கிரவல் வியாபாரம்.
அங்கேதான் பிரச்சினை.
கிரவல் வர்த்தகத்தில் தனி ஒருவனாக பொட்டா.
இந்த ஏகபோகத்தை உடைக்கும் வகையில் களத்தில் இறங்குகிறார் பத்ம.
இது பிடிக்கவில்லை பொட்டாவுக்கு...
முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்.
மிரட்டுகிறார் பத்மவை.கைவிடுமாறு கூறுகிறார் அந்த வர்த்தகத்தை...
மறுக்கிறார் பத்ம.
இதனால் ஆரம்பமாகிறது சண்டை இருவருக்குமிடையில்...
போட்டுத் தள்ளுகிறார் பத்ம பஸ் சமிந்தவை.
சமிந்த பஸ் பொட்டாவின் ஆள்.உறவினர் வேறு .
உஷாராகிறார் பொட்டா.இத்தோடு...
இனியும் விட்டு வைக்கக்கூடாது.
உடனே போட்டுத் தள்ள வேண்டும் பத்மவை...
தொடர்புகொள்கிறார் சஞ்சீவயை...
அவர் சிறையில் இப்போது..
எத்தி வைக்கிறார் விடயத்தை..
உடன்படுகிறார் சஞ்சீவ...வகுக்கிறார் திட்டத்தை...
வீட்டிற்குள் நுழைந்து பத்மவைப் போட்டுத் தள்ளுதல்.
இதுதான் திட்டம்.
ஒரு நாள் இரவு.
திடீரென நுழைகிறார்கள் துப்பாக்கிதாரிகள் பத்மவின் வீட்டுக்குள்.
அவர்கள் வருவதை அவதானிக்கிறார் பத்ம.
தப்பி ஓடுகிறார் அங்கிருந்து...வீட்டின் பின் கதவால்...
பத்ம சிக்கவில்லை.
ஆத்திரம் அவர்களுக்கு...
இதனால் போட்டுத் தள்ளுகிறார்கள் பத்மவின் தந்தையை.
அநியாயமாகக் கொல்லப்படுகிறார் அவர்.
இதனால் கடும் கோபம் பத்மவுக்கு.
அன்றிலிருந்தே எடுக்கிறார் சபதம்.
சஞ்சீவயை -பஸ் பொட்டாவைக் கொல்வதே தனது வாழ்க்கையின் லட்சியம்.
இந்தச் சம்பவம்தான் -இந்தக் கொலைதான் சஞ்சீவயின் வாழ்க்கையை முடிக்கப்போகிறது என்று சஞ்சீவ ஒருபோதும் எண்ணியதில்லை.
பத்தோடு பதினொன்று இந்தக் கொலை அவருக்கு.
குறைத்தே மதிப்பிடுகிறார் பத்மவை...
அன்றிலிருந்தே வகுக்கிறார் திட்டத்தை பத்ம.
நாட்டை விட்டு வெளியேறுகிறார் முதலில் .துபாய்க்கு...
அங்கிருந்துதான் ஆட்டம்.அவரது பாதாள உலக நண்பர்களுடன் சேர்ந்து..
அடிக்கடி சண்டை இரு தரப்பிற்கும்.
சுமார் 30 பேரளவில் பலி இரு தரப்பிலும்.
அப்படியே செல்கையில்...
கிடைக்கிறது முதல் வெற்றி.வீழ்கிறது முதல் விக்கட்.
ஆம்...
போட்டுத் தள்ளுகிறார் பஸ் பொட்டாவை...
இது நடந்தது 2022 ஜூலை 27இல்...
நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு விசாரணை ஒன்று அவருக்கு.
முடித்துவிட்டு அவரது வாகனத்தில் ஏறுகிறார் பொட்டா.
அப்போதுதான் சம்பவம்.
வருகிறார்கள் அங்கு துப்பாக்கிதாரிகள்.பத்மவின் ஆட்கள்.ஒரு வெள்ளை நிற WAGON R வாகனத்தில்...
சுட்டுத் தள்ளுகிறார்கள்.
அவ்வளவுதான்.கதை சரி.
பத்மவுக்கு முதல் வெற்றி.
இரண்டு இலக்குகளில் ஒன்று சரி.
இனி அடுத்த இலக்கு - இறுதி இலக்கு -
அதுதான் சஞ்சீவ.
ஆட்டங்காணுகிறார் சஞ்சீவ இந்தக் கொலையுடன்..
தப்பி ஓடுகிறார் இந்தியாவுக்கு.மன்னார் கடல் வழி ஊடாக...
அங்கிருந்து நேபாளத்துக்கு...
இயங்குகிறார் அங்கிருந்து...
கப்பம் -கொலை -போதைப்பொருள் வர்த்தகம் எல்லாம் அங்கிருந்து கொண்டே...
இருந்தும்,ஓயவில்லை பத்ம.
இலக்கு வைக்கிறார் குடும்பத்தை -சஞ்சீவயின் குடும்பத்தை...
ஒரு நாள் இரவு.
சஞ்சீவயின் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு.
மயிரிழையில் தப்புகிறார்கள் அவரது மனைவி - பிள்ளைகள்.
அதிர்ச்சியடைகிறார் சஞ்சீவ.செய்தி அறிந்து...
குடும்பத்தைக் காப்பாற்ற விரும்புகிறார்.
வருகிறார் இலங்கைக்கு.2023 செப்டம்பரில்...
ஆனால்,விமான நிலையத்தில் வைத்து கைது.
வீரகுல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு.ஒன்பது மாதங்களாக..
விரிவான விசாரணைக்காக...
இரண்டு வருடங்கள் அவர் வெளிநாட்டில்..
அங்கிருந்துகொண்டே 20 கொலைகளை செய்துள்ளார். இங்கு அவரது அடியாட்களின் ஊடாக..
இப்போது பூஷா சிறையில்...
அங்கு வைத்துப் போட முடியாது சஞ்சீவவை.
கடும் பாதுகாப்பு அங்கு அவருக்கு.
சிறையில் இருந்து நீதிமன்றுக்கு வரும்போதும் போட முடியாது.
STF பாதுகாப்பு அவருக்கு..
அப்போது தாக்குதல் நடத்தினால் STF இன் பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரிகள் நிச்சயம் கொல்லப்படுவார்கள்.
இதனால் உரிய தருணத்தை எதிர்பார்த்து நிற்கிறார் பத்ம.
அப்போதுதான் கிடைக்கிறது அந்த வாய்ப்பு.
நீதிமன்றத்துக்குள் வைத்தே போட்டுத் தள்ளும் வாய்ப்பு.
சரியாகப் பயன்படுத்துகிறார் அந்த வாய்ப்பை.
அடைகிறார் இறுதி இலக்கை .
மூடிக்கிறார் சஞ்சீவயின் கதையை.
இந்தச் சம்பவம் -இந்தத் தாக்குதல் எப்படி இடம்பெற்றது என்ற விபரம் எல்லாம் வெளியாகி நீங்கள் அறிந்தவைதான்.
அதனால்,அந்த விபரங்களைத் தவிர்த்து கடந்த காலங்களில் சஞ்சீவ நடத்திய தாக்குதல்கள் -செய்த கொலைகள் உள்ளிட்ட சம்பவங்களை அடுத்த தொடர்களில் உங்களுக்கு விரிவாக வழங்கவுள்ளேன்.

- தொடரும் -

[ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக