St Our Ceylon News: 'அஸ்வெசும' இல்லாத குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் 2026 இல் 6000 ரூபா 'சிஷ்யாதார'
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

புதன், 14 ஜனவரி, 2026

'அஸ்வெசும' இல்லாத குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் 2026 இல் 6000 ரூபா 'சிஷ்யாதார'

சென்ற வருடம் 'அஸ்வெசும' உள்ள ஏழைக் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'சிஷ்யாதார' யாக ரூபா 6000 வழங்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.

இம்முறை 2026 இல் 'அஸ்வெசும' இல்லாவிட்டாலும் அதற்குத் தகுதி வாய்ந்த ஏழைக் குடும்பங்களிலுள்ள தகுதிவாய்ந்த மாணவர்களுக்கும் குறித்த 'சிஷ்யாதார' வழங்குவதற்கு அரசாங்கம் அமைச்சரவையில் முடிவுசெய்துள்ளது.
300 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கே இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு நன்கொடை வழங்குவது தொடர்பில் பிரமர் ஹரிணி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாணவர்கள், அவர்களது பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காகவே இந்தக் கொடுப்பனவை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
அரச பாடசாலைகள் அல்லாத பிரிவெனாக்கள், அறநிலையங்கள் போன்றவற்றிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட ஆவன செய்யப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக