ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வை ரூபா 20000 இனால் அதிகரிக்குமாறு தாம் கோரியிருந்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு. ஜோசப் ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடும்போது, இம்முறை 5000
ரூபாவுக்கும் 19000 ரூபா வரையிலுமே சம்பள அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.ஆனால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு 8000 - 9000 ரூபாவுக்கும் குறைவான தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தம் கோரிக்கைக்கு ஏற்ப சம்பள உயர்வு அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக