சும்மா செத்தவர்கள் நாம் என்று
சும்மா கணக்கிட்டீரோ...?
ஷஹாதாவை மொழிந்து
சாகா வரம் பெற்றவர்கள் நாங்கள்...
மறுமை வாழ்வுக்கும் சேர்த்து
பயணச் சீட்டோடு வந்தவர்கள் நாங்கள்
பயந்து பயந்து போவதற்கு
எங்கள் பகுத்தறிவொன்றும்
பூச்சியமானதல்ல...
பறவைகளில் நான்கைப் பிடித்து
அவற்றை மை போல அரைத்து மாவாக்கி
ரொட்டி உருண்டைகள் நாலாக்கி
நாற்திசை மலைகளில் வைத்தாலும்
மறுபடியும் அதே பறவைகளாய்