St Our Ceylon News: நிறம் மாறிய பொழுதொன்றில் நதி!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

செவ்வாய், 26 டிசம்பர், 2017

நிறம் மாறிய பொழுதொன்றில் நதி!

நேரமெடுத்து விசாரியுங்கள்.
கடல் கொண்ட காதல்
நதியோடு ஒட்டிக் கொண்டு
கலவியாடித் தழுவி
நனைந்திருக்கும்.
செவிமடுத்துக் கேளுங்கள்.
இரைச்சலோசையோடு வடிந்தோடும்
நதி நீர்த் தேடலில்
மெல்லிய மெளனமொன்று புதைந்திருக்கும்.
விழி விரித்துப் பாருங்கள்.
பொருளுணராது நகரும்
நதியின் வலித் தழும்புகளைத் தழுவி விட
காற்றுத் தென்றலடிக்கும்.

ரசனை மேலேறி நின்று மகிழுங்கள்.
நதியுண்டாகியோடும் வளைவுகளில்
வடிந்து மிதக்கும் நதி நாணல்களாய்
சிறு அலைத் தடயங்களிருக்கும்.
இவையனைத்தும்
நிறம் மாறிய பொழுதொன்றில்
கண்டு களிப்பதென்பதோர்
வாழ்வின் வரமாயிருக்கும்..!

-செல்வாமத்துகமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக