சட்டத்தரணியைக் கடத்திய ரணிலின் கும்பல் :
கண்டுபிடித்துக் கொடுத்த மஹிந்த
[ பட்டலந்த தொடர் -03 ]
அரசு வைப்பதுதான் சட்டம்.
அநீதிக்கு எதிராக எவரும் போராட முடியாது.போராடுபவர்களின் கதை அவ்வளவுதான்.
சட்டத்தரணிகளுக்குக்கூட சுதந்திரமில்லை.
அநீதிக்காக வாதாட முடியாது.வாதாடினால் அவர்களும் சரி.
அதற்கு சிறந்த உதாரணம்தான் சட்டத்தரணி விஜயதாச லியனாராய்ச்சி.
அநீதிக்காக வாதாடினார்.அநியாயமாகக் கொல்லப்பட்டார்.
எவ்வாறு கொல்லப்பட்டார்....???
அதைத்தான் பார்க்கப்போகிறோம் இத்தொடரில்...
திறமையான சட்டத்தரணி.மனித உரிமைகளுக்காக - கடத்தல்களுக்காக வாதாடியவர்.
38 வயது இளைஞன்.திருமணம் முடிக்காதவர். சொந்த ஊர் வீரகெட்டிய.
கடத்தப்பட்டவர்களையெல்லாம் தேடுகிறார்.அவர்களுக்காக நீதிமன்றில் வாதாடுகிறார்.
கட்டணம் எதுவுமில்லை.முற்றிலும் இலவசம்.
அப்படியொரு மனிதன்.நல்ல மனிதன்.
இது பெரும் தலையிடி அரசுக்கு.
முடிவெடுக்கிறது அரசு.முடிவெடுக்கிறார் ரணில்.
என்ன முடிவு...???
வேறு என்ன.போட்டுத் தள்ளுவதுதான்.அதுதானே அவர்களின் வழி.
தயாராகிறது அந்தக் கும்பல்.கொலைகார கும்பல்.
1988-08-25 அன்று...
வெளியேறுகிறார் விஜயதாச.புதுக் கடை நீதிமன்றில் இருந்து...
அவர் தங்கி இருந்தது கங்கொடவிலவில்.
நாளை போயா தினம்.ஊருக்குப் போவதற்குத் திட்டம்.
விரைகிறார் கங்கொடவிலவிற்கு.அங்கிருந்து ஊருக்குச் செல்வதற்கு.
பின் தொடர்கிறது ஒரு வேன்.
அதில் பொலிஸார்.தங்காலை பொலிஸார்.
தங்காலைக்கு கடத்திக்கொண்டு செல்வதுதான் ப்லான்.
நடக்கிறது திட்டப்படியே...!!!
கடத்துகிறார்கள் கங்கொடவிலவில் வைத்தே.
கொண்டு போய் இறக்குகிறார்கள் அங்கே.தங்காலை பொலிஸில்...
ரகசிய கடத்தல்தான்.ஆனால்,அம்பலம்.உடனடியாக அம்பலம்.
எப்படி...???
அந்த வேனில் ஓர் இளைஞன்.பல்கலைக்கழக மாணவன்.
அவனும் கடத்தப்பட்ட நிலையில்தான்...
களத்தில் இறங்குகிறார்கள் சட்டத்தரணிகள்.அவனை மீட்பதற்கு.
இதனால் அவனை விட்டுவிடும் கட்டாயத்தில் பொலிஸார்.
செய்கிறார்கள் அப்படியே.இறக்கிவிடுகிறார்கள் பாணந்துறையில்...
அவனுக்கு விஜயதாஸவைத் தெரியும்.
அவன் மூலம்தான் கசிகிறது இந்தக் கடத்தல்.விஜயதாஸவின் கடத்தல்.
அம்பலமானது இப்படித்தான்.
விஜயதாச முதலில் கொண்டுசெல்லப்பட்டது மாத்தறைக்கு.அங்கிருந்து தங்காலைக்கு - ASP அலுவலகத்துக்கு.
பின்னர் ASP கரவிட்ட தர்மதாஸவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு.அடைத்து வைக்கப்படுகிறார் அங்கே.
கொதிகொள்கிறது நீதித்துறை.இக்கடத்தலை அறிந்து...
விஜயதாச பிரபல சட்டத்தரணி.ரஞ்ஜித் அபயசூரிய என்ற மிகவும் பிரபல்யமான சட்டத்தரணியின் கீழ் வேலை செய்தவர்.
இதனால் நீதி துறையில் கடும் பரபரப்பு.
மீட்பு நடவடிக்கை ஆரம்பம்.களத்தில் இப்போது சட்டத்தரணிகள்.
IGP யைத் தொடர்புகொள்கிறார் ரஞ்ஜித் அபயசூரிய.கடத்தலை மறுக்கிறார் அவர்.
இதனால் வேறு வழியில் முயற்சி.
ஹேமன் குணரத்ன.அவர் ஓர் அரசியல் விமர்சகர்-எழுத்தாளர்.
அவருக்கு அரசுடன் நல்ல தொடர்பு.
அவரின் உதவியை நாடுகிறார் விஜயதாசவின் தந்தை.
உதவ முன் வருகிறார் ஹேமன்.ஜனாதிபதி செயலாளரைத் தொடர்புகொள்கிறார் அவர்.
இருந்தும்,அது வேலைக்கு ஆகவில்லை.உதவி கிடைக்கவில்லை.
எங்கே இருக்கிறார்...??? எப்படி கண்டு பிடிப்பது...???
எதுவும் தெரியாது.குழப்பத்தில் எல்லோரும்.
இந்த நிலையில்...!!!
ஹம்பாந்தோட்டை ASP அலுவலகத்துக்குச் செல்கிறார் ஒருவர்.
அவர் ஒரு சட்டத்தரணி.பின்னாளில் ஜனாதிபதி.
அவர்தான் மஹிந்த ராஜபக்ஸ.
அவரின் கண்களில் படுகிறார் விஜயதாஸ.
இதை அப்படியே எத்திவைக்கிறார் மஹிந்த ரஞ்ஜித் அபயசூர்யவுக்கு.
சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவி செயலாளர் ஹேமந்த வர்ணகுலசூரியவிடமும் கூறுகிறார்.
அவ்வளவுதான்...
மீண்டும் IGP ஏனெஸ்ட் பெரேராவைத் தொடர்புகொள்கிறார் ரஞ்ஜித்.
விஜயதாச இருக்கும் இடத்தைக் கூறுகிறார்.
விஜயதாச எந்தவித குற்றமும் செய்யவில்லை.அவருக்கு எதுவும் செய்யாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்.
பாதுகாப்பு செயலாளர் ஜெனெரல் சேபால ஆடிகலவிடமும் கூறுகிறார்.
ASP கரவிட்டவைத் தொடர்புகொள்கிறார் IGP.விஜயதாச அங்கு இருப்பதை தான் அறிந்துள்ளதாக கூறுகிறார்.
உண்மையில்,இந்தக் கடத்தல் தொடர்பில் IGP க்கு எதுவும் தெரியாது.இதெல்லாம் நடப்பது ரணிலின் ஏற்பாட்டில் -பொலிஸில் சிலரைத் தெரிந்தெடுத்து..
விஜயதாஸவின் கடத்தல் கைதாக இருக்க வேண்டும்.சட்டரீதியானதாக இருக்க வேண்டும்.இல்லையென்றால் பெரும் சிக்கலாகிவிடும்.
எச்சரிக்கிறார் IGP.
முதலில் இல்லை என்று மறுத்த கரவிட்ட இப்போது ஒத்துக்கொள்கிறார்.வேறு வழியில்லை.
அந்த ASP அலுவலகத்துக்குச் செல்கிறார் விஜயதாசவின் சகோதரர் சந்த்ரதாச லியனாராய்ச்சி.சட்டத்தரணி தெவ்மி பண்டாரவுடன்...
கரவிட்டவைச் சந்திக்கிறார்.விஜயதாசவைப் பார்க்க அனுமதி கோருகிறார்.
அது நடக்கவில்லை.அனுமதி மறுக்கப்படுகிறது.
இதை ரஞ்ஜித் அபயசூர்யவிடம் எத்திவைக்கிறார் சந்தரதாஸ.
மீண்டும் பாதுகாப்பு செயலாளரைத் தொடர்புகொள்கிறார் ரஞ்ஜித்.
கடும் சிக்கலில் விஜயதாசவின் பாதுகாப்பு.அவரை உடனடியாகக் கொழும்புக்குக் கொண்டு வர வேண்டும் என்கிறார் ரஞ்ஜித்.
அதுவும் எடுபடவில்லை.
நீதிமன்றுக்குச் செல்கிறது இந்த விவகாரம்.உடனடியாக மனுத்தாக்கல்.ரஞ்ஜித்தின் ஏற்பாட்டில்.
தாக்கல் செய்பவர் விஜயதாசவின் சித்தப்பா கெமுனு திஸ்ஸ தஹாநாயக.
இந்த மனு நான்கு பேருக்கு எதிராக...
பாதுகாப்பு செயலாளர் சேபால ஆடிகல ,IGP ஏனெஸ்ட் பெரேரா,தென் மாகாணத்துக்கு பொறுப்பான DIG பிரேமதாச உடுகம்பொல,தங்கால ASP கரவிட்ட தர்மதாஸ ஆகியோரே அந்த நால்வர்.
1988 செப்டம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிப்பு.மறுநாளே விவாதம்.
விஜயதாசவை உடனடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறது இந்த மனு.
விஜயதாசவை உடனடியாக கொழும்புக்கு கொண்டு வர வேண்டும்.
தெற்கு DIG க்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு.
இதை அறிந்து இதில் உடனடியாக தலைபோடுகிறார் ரணில் விக்ரமசிங்க....
தொடரும்....!!!
[ ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக