தீயில் உருகும் உயிர்கள் - சந்தியில் கிடக்கும் உடல்கள் :
எல்லாக் கொலைகளும் ஜேவிபியின் தலையில்...
[படலந்த தொடர் -02 ]
பெண் பொலிஸார் பலரும் இந்த சித்திரதையில் ஈடுபட்டமைதான்.
அதில் முக்கியமானவர் பதமினி பிரேமலதா [ SI ]
பல ஆண்களை நிர்வாணப்படுத்திக் கொடுமை செய்தவர்.
தேரர் ஒருவரும் அதில்.
அவரை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்ததே பிரேமலதாதான்.
இப்படி சில நாட்கள் வதை.அதன் பின் கொலை.
சடலங்கள் எங்கே...???
டயர்கள் போட்டு எரிக்கப்படும் - சந்திகளில் போடப்படும் - மட்டக்குழி குப்பை மேட்டில் வீசப்படும் -அதில் போட்டு எரிக்கப்படும்.
உடல்கள் சாம்பலாகும் - அல்லது அரைகுறையாக வேகும்.
எல்லாக் கொலைகளும் ஜேவிபியின் தலையில் - இவர்களின் கணக்கில்...
தீயில் உருகும் உயிர்கள் - சந்தியில் கிடக்கும் உடல்கள் - குப்பை மேடுகளில் குவியும் உடல்கள் -ஆற்றில் மிதக்கும் உடல்கள்.
இப்படி எல்லாம் ஜேவிபியின் கணக்கில்...
இவர்களும் செய்யாமலில்லை.செய்தது எல்லாம் இவர்கள் இல்லை.
இவர்கள் ஒன்று என்றால் ..அவர்கள் பத்து...
பத்தோடு பதினொன்று...
பதினொன்றும் ஜேவிபியோடு..
இதுதான் கணக்கு.இது ரணிலின் கணக்கு.
தினமும் கொலை.
அலை அலையாய்க் கொலை.
இரவெல்லாம் வெறியாட்டம்.கொலை வெறியாட்டம்.
விடிந்தால் வீதிகள் எங்கும் கூட்டம்.
பிணங்களின் கூட்டம்.
கொல்லப்படுவோரெல்லாம் ஜேவிபியா...?
இல்லை ஜேவிபியின் ஆதரவாளர்களா...?
இல்லை...!!!
கொஞ்சம்தான் அவர்கள்.
மிச்சமெல்லாம் இவர்கள் - அப்பாவிகள்.
ஏன் அப்பாவிகளை கொல்ல வேண்டும்...???
ஜேவிபியின் தலையில் போடுவதற்காக - ஜேவிபிக்கு எதிராக மக்களை உசுப்புவதற்காக.
உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.
போராட்டத்தின் உச்சக்கட்டம்.
அறிக்கை ஒன்றை விடுக்கிறது தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம்.ஜேவிபி சார்பு இயக்கம் அது.
பாரதூரமான அறிக்கை.
அரச படைகளில் உள்ளவர்கள் அதில் இருந்து விலக வேண்டும்.
விலகி எம்முடன் இணைய வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் படையினரின் குடும்பங்களை கொல்வோம்.
இதுதான் அந்த அறிக்கையின் சுருக்கம்.
ஜேவிபிக்கு ஆபத்தாக அமைகிறது இந்த அறிக்கை -இந்தத் தீர்மானம்.
இதைச் சரியாக - தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறது அரசு.
களத்தில் இறங்குகிறார் ரஞ்ஜன் விஜயரத்ன.பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
நடக்கிறது அராஜகம் சொன்னதுபோலவே...
ஆம்...
கொல்லப்படுகிறார்கள் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் உறவினர்கள் - சிப்பாய்களின் உறவினர்கள்.
இதைச் செய்வது யார் ..?
சொன்னதுபோலவே ஜேவிபியா..???
இல்லை...
ரஞ்ஜன் விஜயரத்ன.
அவர்களுக்கே - ஜேவிபிக்கே மாறி விழுகிறது அடி.அந்த இயக்கத்தின் அந்தத் தீர்மானத்தால்.
இக்கொலைகள் அனைத்தும் இப்போது ஜேவிபியின் தலையில்.
படையினருக்கோ கடும் கோபம்.கொல்லப்படும் குடும்பங்களை சேர்ந்த படையினருக்கு.
அந்தப் படையினரை அணுகுகிறார் ரஞ்சன்.திட்டப்படி.
உங்கள் உறவினர்களை கொன்றவர்களை பழிவாங்க விருப்பமா...???
ரஞ்ஜனின் கேள்விக்கு ஆம் என்கிறார்கள் அந்தப் படையினர்.
அவர்களை ஒன்றுசேர்க்கிறார் ரஞ்ஜன்.விசேட பிரிவொன்றை அமைக்கிறார்.பயிற்சி வழங்குகிறார்.
கொடூரமான பயிற்சி.பழிவாங்கும் பயிற்சி.
களத்தில் இறக்குகிறார் அவர்களை.
ஜேவிபிக்கு எதிராக - அவர்களை கொன்று குவிப்பதற்காக...
பட்டலந்த வதை முகாமிலும் இந்தப் படையினர்.
இப்படித்தான் ஜேவிபியின் தலையில் வீழ்கின்றன பல கொலைகள்.
ஒரு வருடமாகத் தொடர்கிறது இந்த வெறியாட்டம் .
கடத்தப்பட்ட எல்லோரும் கொல்லப்பட்டார்களா...???
இல்லை.சிலர் விடுதலை.
அது எப்படி ...???
கடத்தப்பட்டவர்களை வைத்தே பிஸ்னஸ் ஒன்றை செய்கிறார் டலஸ் பீரிஸ்.
விடுவிக்கப்பட வேண்டுமா...????
அப்படியென்றால் ,ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபா.
50 ஆயிரம் என்றால் இப்போதுள்ள 50 ஆயிரமா?
இல்லை.அப்போதுள்ள 50 ஆயிரம்.
இன்றைய கணக்கில் அது பல லட்சம் ரூபா.
அதை வைத்து ஒரு மாடி வீடே கட்டலாம் அன்று.
முடிந்தவர்கள் கொடுக்கிறார்கள்.
முடியாதவர்கள் கிடக்கிறார்கள் - செத்து மடிகிறார்கள்.
இந்த அடிப்படையில்...!!!
குறிவைக்கப்படுகிறார்கள் பணக்காரர்கள்.
ஒரே தூக்கு. இந்த பக்கம் 50 ஆயிரம்.அந்த பக்கம்
ரிலீஸ்.
இதற்கென்றே சில புரோக்கர்கள்.அவர்களுக்கும் ஒரு பங்கு.
இதுவும் ஜேவிபியின் தலையில்...
முன்பு சொன்னதுபோல்...!!!
எல்லாமே அவர்களின் கணக்கில்....
யாரையெல்லாம் ஜேவிபி மிரட்டுகிறதோ அவர்கள் மறுநாள் பலி.
மிரட்டுவது அவர்கள்.கொல்வது இவர்கள்.கொலைப் பலி ஜேவிபிமீது.
வீட்டைவிட்டு ஒருவர் வெளியே போகிறாரா.வீடு திரும்புவது நிச்சயமில்லை.
அப்படித் திரும்பவில்லையா...
மறுநாள் நிச்சயம் கிடைப்பார்.உயிரோடல்ல பிணமாக.எங்காவது ஒரு பிணக்குவியலில் இருந்து...
சில வேளை பல நாட்கள் சென்றும் கிடைப்பார்.அப்போதும் பிணமாகத்தான்.
பெண்களும் தப்பவில்லை.
வெளியே செல்வார்கள்.வேலைக்குச் செல்வார்கள்.
ஆனால்,ஆளில்லை.
மறுநாள் அவர்களும் அதே குவியலில்.பிணக் குவியலில்.
குடைகள் -ஹேண்ட் பேக்குகளுடன் அவர்களின் உடல்கள் அங்கு.அதுவும் நிர்வாணமாக...
அடையாளம் கண்டால் எடுத்துப் போக வேண்டியதுதான்.இல்லாவிட்டால் அநாதை பிணம்.
இந்த அநீதிக்கு எதிராக எவரும் குரல் கொடுக்க முடியாது.
குரல் கொடுத்தால் குரல்வளை நசுக்கப்படும் -அறுக்கப்படும்.
பொலிஸாருக்கும் அதே நிலைதான்.நேர்மையாக செயற்பட முடியாது.
அவர்கள் இந்த அநியாயத்தோடு கைகோர்க்க வேண்டும்.இல்லையேல்..பொத்திகிட்டு இருக்க வேண்டும்.
துள்ளினால் பொது சுமப்பர்.
சட்டத்தரணிகள்கூட சட்டப்படி செயற்பட முடியாது.இந்த அநீதியை சட்டத்தின் முன் கொண்டு செல்ல முடியாது.
அப்படிச் செய்தால் அவர்களும் சரி.
அப்படிச் செயற்பட்ட -அநீதிக்காக நீதிமன்றில் வாதாடிய ஒரு நேர்மையான சட்டத்தரணி எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா?
அந்தக் கொடூரத்தைப் பார்ப்போம் அடுத்த தொடரில்...
[ ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக