இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மூத்த ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது, ஊடகப் பயிற்றுவிப்பாளரும், பத்தி எழுத்தாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தயாரிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வு, முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ டொக்டர் நளின் த ஜயதிஸ்ஸ அவர்களின் பங்கேற்புடன் 2025.02.02 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக