St Our Ceylon News: நாளை நோன்பா இல்லை பெருநாளா?
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வியாழன், 14 ஜூன், 2018

நாளை நோன்பா இல்லை பெருநாளா?

மெய்ப்பொருள் கண்டும்
மௌனம் சாதிப்பதேன்?
மென்றொழிக்கும் தன்மை
மேலவனால் அறியாததா?

மெல்லிய இளங்கீற்று இளம்பிறை
மெல்லிதாய் ஒருசிறுபொழுது
மௌனித்துச் செல்வதைச் சிலர்
மேகமூட்டத்துடன் கண்டு
மேலவன் பேரில் சத்தியமிட்டு
முஸ்லிம் நான்தான் சொல்கிறேனென
முழங்கியும் மௌனம் காப்பதேன்?

முஸ்லிம்களுக்கு நன்மைநாடும்
மரியாதை மிகு உலமாக்களே
முந்துங்கள் உண்மையை உலகிற்கு
முந்திச் சொல்ல நீங்கள்....

முழங்குங்கள் உண்மைகண்டு
நாளை பெருநாளா?
இல்லை நோன்பா? என்று

தயவுசெய்து உங்கள் பத்வாக்களை
ஸஹரின் பின்னர் சொல்லாதீர்கள்...

பலரின் “பத்வா”க்கள்
உங்கள் பத்வாக்களுக்கு எதிராக
நீளும் என்பதை மறவாதீர்கள்...

உங்கள் தலைமையில்
மௌனித்து நிற்கும் மக்களின்
நன்மதிப்பைப் பெற்று
அல்லாஹ்விடம் குற்றவாளியாகாதிருக்க
இப்போதே...
இந்நிமிடமே
ஆராய்ந்து
அறுதியும் இறுதியுமாய்ச் சொல்லுங்கள்

நாளை நோன்பா?
இல்லை
பெருநாளா?

கூடவே,
பிறை பார்ப்பதற்கான தகுதியையும்
யார்தான் பார்க்க வேண்டும் என்பதையும்
இலங்கை முஸ்லிம்களுக்கு
“பெனர்” போட்டுச் சொல்லுங்கள்...

“அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...”

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக