பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனாவைக் கைது செய்து, சட்டத்தைச் செயற்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
மேலும் இதுதொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றிற்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது.
அநுராதபுரத்தில் போக்குவரத்துப் பொலிஸார் தங்கள் கடமையை நிறைவேற்றுவதற்கு இடையூறாக இருந்தமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் ஆவன செய்து, அநுராதபுர நீதிமன்றிற்கு விடயம் தொடர்பில் தெரிவித்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் நீதவான் நீதிமன்றம் இந்த கட்டளையை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
(பரிவர்த்தனம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக