St Our Ceylon News: Srilanka Pen Club அமைப்பின் நான்காவது தேசிய மாநாடு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

செவ்வாய், 7 ஜனவரி, 2025

Srilanka Pen Club அமைப்பின் நான்காவது தேசிய மாநாடு

கடந்த 2025.01.05 ஞாயிறு ,ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பான Srilanka Pen Club அமைப்பின் நான்காவது தேசிய மாநாடு திருகோணமலை ஜூபிலி மண்டபத்தில் அதன் ஸாதாபகத் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.

நாட்டின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் எண்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண வீதி ,வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன முதலமைச்சின் செயலாளர் ஜனாப் M M நஸீர்,கி.மா.முதலமைச்சின் நிதிமற்றும் திட்டமிடல் சட்ட அமுலாக்கல் முதலமைச்சின் செயலாளர் ஜனாப் Z A M பைஸால் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

கி.மா.பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவனீதன் விசேட அதிதியாகவும்,சிறப்பு அதிதிகளாக A F M அஷ்ரப் மொழித்துறை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் நம்மடமுற்றம் ஆசிரியரும் பொறியியலாளருமான கதிர் திருச்செல்வம் அவர்களும் கௌரவ அதிதிகளாக திருமலை ஸாஹிறா கல்லூரி அதிபர் M M முஹைஸ் ,அருட்தந்தை Dr p போல் ரொபின்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக