அடிப்படை வசதிகளுக்கான கட்டணங்களைக்கூட கட்டவியலாத நிலைமைக்கு உள்ளாகியுள்ள இந்த நாட்டில் பாடசாலை மாணவர்களில், மிகச் சிறியதொரு தொகையினருக்கு உதவி வழங்குவதற்குப் பதிலா, அரசாங்கம் உடனடியாக நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் நன்மை பெரும் பொருட்டுபாடசாலை உபகரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தலைவர் பிரியந்த பிரனாந்து குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் நிற்கும்போது, அன்றைய அரசாங்கத்திற்காக ஆசிரியர்,
அதிபர் ஒருமைப்பாட்டு அமைப்பினராகிய எங்களுடன் கைகோத்தவர்கள் 3 மாத கால எல்லைக்குள் அதனை மறந்துவிடுவது மிகவும் கவலைக்கிடமான செயலாகும் எனவும் பிரியந்த பிரனாந்து குறிப்பிட்டார்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பிரனாந்து அவர்கள் நேற்று முன்தினம் (28) அனுராதபுரத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த காலப்பகுதியில் பல்வேறு அமைப்புகள், பெற்றோர்களுக்கு விலை அதிகமான முறையில் பாடசாலை உபகரணங்களை வழங்கிவருவதை சகிக்கமுடியவில்லை. அதனால் பாடசாலைப் பொருட்களுக்கான வரியை இல்லாமற் செய்ய வேண்டும் என்பதே ஆசிரியர் சங்கத்தின் கோரிக்ைகயாக உள்ளது.
கல்வியமைச்சின் கணக்கெடுப்பின்படி இந்நாட்டில் 43 இலட்சம் மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுள் நூற்றுக்கு 52 வீதமானவர்கள் இந்த துன்பியல் தன்மைக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக