போலிப் பட்டங்கள் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.
கல்வித் துறை சார்ந்த கல்விமாணி, பட்டப் பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணி, பட்டப் பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என பல பாடநெறிகளை ஊர் பெயர் தெரியாத பல நிறுவனங்கள் வழங்குவதாக விளம்பரங்கள் காணக் கிடைக்கின்றன. கலாநிதி பட்டம் வழங்கும் நிறுவனங்களும் மலிந்துவிட்டன.
சில நிறுவனங்கள் ஒரு சில வாரங்களில்/
மாதங்களில் கூட பட்டங்களை வழங்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.இதில், வலய, மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், விரிவுரையளர்கள், அதிகாரிகள் என பெரிய பெரிய தலைகளுக்கும் சம்பந்தம் உள்ளதாகவும் அதனடிப்படையில் பதவி உயர்வுகள் அனுமதிக்கப்படுவதாகவும் பரவலாக குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இப்பின்னணியில், இவ்வாறு பட்டம் வழங்கும் நிறுவனங்களின் தகைமை, மற்றும் இவை தொடர்பான ஒழுங்கீனங்களை சீர் செய்யும் பொருட்டு பட்டங்களை உறுதிப்படுத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தும் தேசிய அதிகார சபை ஒன்றை ஸ்தாபிக்க சில முன்மொழிவுகள் கடந்த காலங்களின் கலந்துரையாடப்பட்டன.
எனினும், அவை நடைமுறைக்கு வரவில்லை.
எனினும் தற்போது அதற்கான உறுதியான ஒழுங்குமுறை ஒன்றுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அரச நிறுவனங்களல்லாத உயர் கல்வி நிறுனங்கள், அவை வழங்கும் பட்டங்கள் மற்றும் அதற்கான பொறிமுறை ஆகியவற்றைப் பரசிலீப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களின் தர உறுதி மற்றும் அங்கீகாரம் தொடர்பான நிலையியற் குழு ஒன்றை அரசாங்கம் அதற்காக ஸ்தாபித்துள்ளது.
இக்குழுவிற்கு பல்வேறு துறைசார்ந்தவர்களை அரசாங்கம் உறுப்பனர்களாக நியமித்துள்ளது.
அரச சார்பில்லாத உயர் கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டம் தொடர்பான தர நிர்ணயம் மற்றும் அவற்றின் தரத்தைப் பேணுதல் ஆகயவற்றுக்குத் தேவையான கொள்கை அடிப்படையிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை உருவாக்குவதே இக்குழுவின் பிரதான நோக்கமாகும்.
இக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று, பிரதமரும் கல்வி, உயர் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் அமைச்சில் நடைபெற்றது.
ஒரு தீர்க்கமான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் இறுக்கமான நடைமுறைகள் கொண்ட திட்டங்கள் வரும் என எதிர்வு கூறப்படுகிறது.
விரைவில் இந்த குழுவின் வழிகாட்டலின் படி, பட்டம் வழங்கும் கடைகளை மூடுவது மாத்திரமன்றி, வழங்கப்பட்ட பட்டங்கள் மற்றும் அதனடிப்படையில் பெறப்பட்ட பதவி உயர்வுகள் என்பனவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
Jasar JM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக