இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகவும் இராணுவத் தளபதியாகவும் 40 ஆண்டுகளாக நாட்டிற்குச் சேவையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 2025 ஜனவரி 1 முதல் ஓய்வு பெறவுள்ளார்.
1984 மார்ச் 5ஆம் திகதி தியத்தலாவ இராணுவத் தளத்தில் கெடட் பாடநெறியில் சேர்ந்த அவர், வடக்கு-கிழக்கை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் 58வது படைப்பிரிவின் தளபதியாகச் சிறப்பாகச் செயற்பட்டார்.
2019 ஆகஸ்ட் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டு, 2022 மே 31
ஆம் திகதி வரை பணியாற்றினார். பின்னர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரை நான்கு ஜனாதிபதிகளின் கீழ் சேவையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக