St Our Ceylon News: இலங்கை நிர்வாக சேவைக்கு மீயல்லை பாத்திமா நப்லா தெரிவு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 16 பிப்ரவரி, 2019

இலங்கை நிர்வாக சேவைக்கு மீயல்லை பாத்திமா நப்லா தெரிவு

மீயல்லையைப் பிறப்பிடமாகவும் வெலிகமையை வசிப்பிடமாகவும் கொண்ட பாத்திமா நப்லா, அண்மையில் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் (SLAS) சித்தி பெற்று,  நிர்வாக சேவைக்குத் தெரிவாகியுள்ளார் . 

இவர், மாத்தறை மாவட்டத்தின் மீயல்லைக் கிராமத்திலிருந்து  இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவான முதலாவது நபராவார்.
பாத்திமா நப்லா,  தனது ஆரம்பக் கல்வியை மீயல்லை அல்மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை அறபா தேசிய பாடசாலையிலும், உயர்தரக்
கல்வியை  கணித பிரிவில் கல்முனை  - மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நிறைவு செய்து, பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார்.

 கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவில்  இளமாணிப் பட்டத்தை Bachelor Of Science , Special in Mathematical Finance (2nd class lower) பெற்று,  தற்போது இலங்கை கட்டுமானத் துறை திணைக்களத்தில் நிருவாக உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.

பாத்திமா நப்லா, ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர் யூஸுப், மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலய ஆசிரியை றபியுல்லுஹா ஆகியோரின் புதல்வியாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக