துரைவி 88 வது பிறந்த விழாவும், நினைவுப் பேருரையும் துரை விருது வழங்கலும் எதிர்வரும் மார்ச் 02.03.2019 அன்று சனிக்கிழமை மாலை 4 .30 மணிக்குத் தெளிவத்தை ஜோசப் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் நடைபெறும்.
இந்த நிகழ்வுக்கான நினைவுப் பேருரையைப் பேராதனை பல்கலைக்கழ தமிழ்த்துறை
விரிவுரையாளர் எம்.எம். ஜெயசீலன் அவர்கள் "மலையக மொழிபெயர்ப்பு முயற்சிகள் அறிமுகக் க் குறிப்புகள் " எனும் தலைப்பில் நிகழ்த்துவார்.
2018 ஆம் ஆண்டு வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூலாக தெரிவு
செய்யப்பட்ட ஆங்கில கவிதைகளின் தமிழ்மொழிபெயர்ப்பு நூலான ஜிஃப்ரி
ஹாஸனின் '' மூன்றாம் பாலினத்தின் நடனம்'' எனும் நூலுக்கும், 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு நூல்களில் சிறந்த நூலாக தெரிவு
செய்யப்பட்ட முருகுகேசு பாக்கிய நாதனின் கல்விக் கண்திறந்த கோயில்கள்'' எனும்
நூலுக்கும் துரைவி விருதுகள் வழங்கப்படும்.
நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்துவார். நிகழ்ச்சிகளை மேமன்கவி தொகுத்து வழங்குவார்
நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்துவார். நிகழ்ச்சிகளை மேமன்கவி தொகுத்து வழங்குவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக