St Our Ceylon News: மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

திங்கள், 4 பிப்ரவரி, 2019

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று நேற்று (03) அன்று மாலை 5.45 மணியளவில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்று இரவு 9.45 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையக புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ரயிலின் சரக்கு பெட்டி பகுதியே தடம் புரண்டிருந்தது.

26630 லீற்றர் எண்ணெய்க் கொள்கலன் ஒன்றை கொட்டகலை எரிபொருள் டிபோவில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தரப்பத்திலேயே இவ்வாறு தடம் புரண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக