வெலிகமப் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அண்மையில் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அர்க்கம் இல்யாஸ் தலைமையில் நேற்று (26) வெலிகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வெலிகம பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கியமான பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டன. வெலிகம
சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தை, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 24 மணித்தியாலங்களும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் வெலிகம புகையிரத நிலையத்தினூடாக இணையவழி மூலம் பயணச் சீட்டு முன்பதிவும் வழங்கப்படவுள்ளன. கடலோர சுற்றுலா வலயத்தில் உட்கட்டமைப்பு, மின் விளக்குகள் பொருத்தி அழகுறச் செய்யப்படவுள்ளது.
வெலிகம நகரை சுற்றுலா நகரமாக மாற்றியமைத்து நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல், தெனிப்பிட்டிய மற்றும் பொல்வத்துமோதர வீதியைப் புனர்நிர்மாணம் செய்தல், கழிவகற்றல், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றன விரிவாக ஆராயபட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக