St Our Ceylon News: விழாக்கோலம் பூண்ட போர்வையூர்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

விழாக்கோலம் பூண்ட போர்வையூர்

போர்வையூர் இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. போர்வையூருக்கு பலமாய் அமைந்த இளங்கலை பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் Sadathians Excellence Award Ceremony வெகு சிறப்பாய் நடந்தேறியது.

கடந்த பத்து வருட காலப்பகுதிக்குள், தம் உயர்கல்வியைத் தொடருவதற்காக போர்வை மண்ணிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கும், கல்வியியல் கல்லூரிகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட, மாணாக்கரை கௌரவிக்கும் நிகழ்வு இது. இன்றைய தினம் மொத்தமாய் 63 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். மாறை ஸதாத் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் வதீர் அவர்களின் அனுசரணையில் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தினரால் ஸதாத்தின் உயர்வுக்காய் உழைத்து அண்மையில் ஓய்வு பெற்ற வதீர் அதிபரவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை போற்றத்தக்கதே.



நிகழ்வின் பிரதம அதிதியாக தென்மாகாண தமிழ் மொழிமூல பிரதிக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷைக் மஷாயிர் அவர்களும், முன்னாள் தென்மாகாண தமிழ் மொழிமூல பிரதிக்கல்விப் பணிப்பாளரும் ஸாதாத்தின் பழைய மாணவியுமான ஹாஜியானி மதனியா கலீல் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

-Ash-Sheikh Ashkar Ameen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக