St Our Ceylon News: பழைமை வாய்ந்த இலங்கைப் பள்ளிவாசலுக்கு உரிமை கோரும் இந்திய நபர்? | கொதித்தெழுந்துள்ள ஊர் மக்கள்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

பழைமை வாய்ந்த இலங்கைப் பள்ளிவாசலுக்கு உரிமை கோரும் இந்திய நபர்? | கொதித்தெழுந்துள்ள ஊர் மக்கள்

இலங்கையின் மிகப் பழைமை வாய்ந்த மத்ரஸாக்களுள் ஒன்றே, வெலிகம - கல் பொக்கையிலுள்ள பாரி மத்ரஸாவாகும். 

தற்போது அந்த மத்ரஸாவுக்கும் பள்ளிவாசலுக்கும் உரிமை கோரிக் கொண்டு இந்தியர் ஒருவர் வந்திருப்பது தொடர்பில், ஊர் மக்கள் பெரும்

அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர் என ஊர்வாசிகளிற் சிலர் குறிப்பிடுகின்றனர். 

மிகப் பழைமை வாய்ந்த மத்ரஸா ஏற்கனவே ஊரைச் சேர்ந்தவர்களாலேயே நிருவாகிக்கப்பட்டு வருகின்றது. 3000 இற்கும் மேற்பட்ட ஊரவர்கள் இதன் அங்கத்தவர்களாக இருக்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது. 

'இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்து, இந்தப் பள்ளிவாசலும் மத்ரஸாகவும் தங்களுக்குச் சொந்தமானது எனவும், அதன் பொறுப்பை தமக்குத் தர வேண்டும் என்றும் விடாப்பிடியாக நிற்கின்றார். ஊரில் அது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.' எனவும் பொதுமக்களிற் சிலர் மேலும் குறிப்பிட்டனர். 

என்றாலும், இந்த கருத்துக்கு எதிராகவும் சிலர் 'இது சுன்னத் வல் ஜமாஅத்திற்குரிய பள்ளிவாசல்,ஸுன்னத் வல் ஜமாஅத்தினராலேயே தொடர்ந்து பராமரிக்கப்பட்ட வந்தது. ஒரு சில வருடங்களாக தௌஹீத் ஜமாஅத்தினர் தாங்கள் பள்ளிவாசலைக் கைப்பற்றுவதற்கு ஆவன செய்து வருவதாகவும் குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக