இலங்கை போக்குவரத்து சபை (CTB) பஸ் நடத்துநர்களாக வரலாற்றில் முதன்முறையாக
பெண்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு 20 பெண்களுக்கு நியமனக் கடிதங்களை
வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தில் (Makumbura Multimodal Transport Centre
) நடைபெற்றது.பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துநர்களுக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
SLTB-ல் உள்ள ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக