St Our Ceylon News: நாட்டின் மிலேச்சகரமான தாக்குதலுக்கு இ.தொ.கா கண்டனம்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 5 மே, 2019

நாட்டின் மிலேச்சகரமான தாக்குதலுக்கு இ.தொ.கா கண்டனம்


நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிலேச்சகரமான தொடர்பு கொண்டு வெடிப்பு தாக்குதலை கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களை பாதுகாக்கும் வகையில் கட்சி என்ற பேதமற்று செயற்படவுள்ளதாக காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.



2ம் தவணைக்காக 06.05.2019 அன்று திங்கட்கிழமை மலையகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையை தொடரவிருக்கும் இந்த நிலையில் பாடசாலைகள், மாணவர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி நுவரெலியா பிரதேச அதிரடி படையினர், பொலிஸார் உள்ளிட்ட பொதுமக்கள் அடங்கிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம், கொட்டகலை நகர் கலாச்சார மண்டபத்தில் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஏப்ரல் 21ம் திகதி நாட்டை துக்கமடைய செய்யும் வகையில் மிலேச்சகரமான சமாதானத்தை விரும்பும் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலை இன்று நாடு அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு படையினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் பின் தாக்குதலுடன் சம்மந்தப்பட்டவர்கள் யார், எவர் என்ற விடயங்கள் அரசாங்கத்தால் வெளிவரும் என நம்புகின்றேன்.

மக்கள் உயிர் சம்மந்தப்பட்ட விடயம் என்பதால் மக்களின் உயிரை காக்க இன்றைய தருணத்தில் நாம் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும். அந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பாதுகாவலன் என்ற வகையில் பாதுகாப்பு சம்மந்தமாக தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க மலையக பிரதேச பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் அறிமுகமற்றவர்களை தோட்டப்பகுதிகளுக்கு உள்வாங்குதல், பாடசாலைகளின் வளாகங்கள் பாதுகாத்தல், சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தல், பாதுகாப்பு நலன் கருதி மக்கள் மத்தியில் வரும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றது.

அதே சந்தர்ப்பத்தில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறகப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இராணவத்தினர் பாடசாலைகளுக்காக பாதுகாப்பை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் மக்களும் பாடசாலைகளை பாதுகாக்கவும், மாணவர்களை பாதுகாக்கவும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவத்தோடு, சம்மந்தப்பட்டவர்கள் அல்லது தாக்குதல்களை மேற்கொண்டவர்களோடு உறவாக இருந்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் பாதுகாப்பு தரப்பினர் ஊடாக பாரிய விசாரணையை முன்னெடுத்து வருகின்றது.

விசாரணையின் பின் இவ்வாறாக சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு உதவியவர்களின் விபரங்கள் வெளிவரும் என நம்புகின்றேன்.

(க.கிஷாந்தன்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக