குவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பரிசில்களை ஈட்டியுள்ளார்.
அல் ஹுராபி அல் குர்ஆன் மனனப் போட்டியில் சுமார் 45 நாடுகளின் மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளார்.
அதேபோல் குவைத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
புத்தளம், மதுரங்குளி, கனமூலை என்ற பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட தற்போது குவைத்தில் வசித்து வரும் மௌலவி முஹம்மது சியாம் அவர்களின் சிரேஷ்ட புதல்வரே அஹ்மத் பஸ்ஹான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளையும் புரிய வேண்டும் என எல்லோரும் இம்மாணவனை வாழ்த்துகின்றனர்.
-JM-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக