St Our Ceylon News: இளம் ஊடகவியலாளர்களுக்கான ஐ.நா. பயிற்சி நெறிக்காக காத்தான்குடி பைறூஸ் நியூயோர்க் பயணம்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

இளம் ஊடகவியலாளர்களுக்கான ஐ.நா. பயிற்சி நெறிக்காக காத்தான்குடி பைறூஸ் நியூயோர்க் பயணம்



ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தினால் நடாத்தப்படும் இளம் ஊடகவியலாளர்களுக்கான 'ரெஹாம் அல் பர்ரா' (Reham Al Farra Fellowship) புலமைப்பரிசில் திட்ட பயிற்சி நெறியில் பங்கேற்க 'விடிவெள்ளி' பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ், நாளை நியூயோர்க் பயணமாகிறார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துடன் இணைந்ததாக நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் மூன்று வார காலத்திற்கு இப் பயிற்சி நெறி

நடைபெறவுள்ளது.

உலகளாவிய ரீதியில் விண்ணப்பித்த 650 இளம் ஊடகவியலாளர்களிலிருந்து 14 பேர் இப்பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய 18 வருடங்களின் பின்னர் இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் இப் பயிற்சி நெறியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

குவைத், புரூண்டி, நிகரகுவா, ஆப்கானிஸ்தான், துருக்கி, தன்சானியா, வெனிசுவேலா, கென்யா, இந்தியா, நைஜீரியா, சேர்பியா, உகண்டா, கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்தும் இளம் ஊடகவியலாளர்கள் இப் பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப் பயிற்சி நெறியின் பங்குபற்றுனர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் உட்பட ஐ.நா. நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் நியூயோர்க்கிலுள்ள பிரபல ஊடக நிறுவனங்களிலும் பயிற்சிகளைப் பெறவுள்ளனர்.

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், காத்தான்குடி அல் ஹிறா மகா வித்தியாலயம், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி, இலங்கை இதழியல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவரும் இலங்கை - பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமாவார்.

இவர் கவிமணி மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி), ஆயிசா உம்மா தம்பதியின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



-நுார்தீன் எம்.எஸ்.எம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக