St Our Ceylon News: அரச இலக்கிய விருது வழங்கல் விழா - 2018
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அரச இலக்கிய விருது வழங்கல் விழா - 2018

உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம், அரச இலக்கிய ஆலோசனைக் குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்யும் 61 ஆவது  அரச இலக்கிய விருது வழங்கல் நிகழ்வு 2018 செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஷ, உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு ஆகியோரின் அழைப்பில் இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு-07, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது சுய நாவல், சுய சிறுகதைத் தொகுப்பு, சுய கவிதைப் படைப்பு, சுய இளையோர் இலக்கிய, படைப்பு, சுய பாடலாக்கத் தொகுப்பு, சுய நாடகம், சுய அறிவியல் படைப்பு, சிறுவர் இலக்கிய படைப்பு, சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு, நானாவித விடய நூல்கள் மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு, மொழிபெயர்ப்பு  கவிதை படைப்பு, மொழிபெயர்ப்பு  நாடகம், மொழிபெயர்ப்பு - புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு  எனும் தலைப்புகளில் நூல்கள் மதிப்பீடு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர இலங்கை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இலக்கியத்துறைக்கு ஆற்றிய உன்னத சேவைக்காக இலக்கியவாதிகளுக்கு வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் தேசத்தின் உயர் கௌரவ அரச விருதான “சாகித்தியரத்னா” அதி உயர்விருது வழங்குவதற்காக இந்த வருடம் சிங்கள மொழியில் பேராசிரியர் கே.என்.ஓ. தர்மதாச அவர்களுக்கும், தமிழ் மொழி மூலம் மூத்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமான மு. பொன்னம்பலம் (மு.பொ.) அவர்களுக்கும், ஆங்கில மொழி மூலம் பேராசிரியர் கனநாத் ஓபேசேரக அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக