St Our Ceylon News: கஞ்சா கொடுத்து நித்யானந்தா மயக்கினார்: பெற்றோர் கதறல்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

கஞ்சா கொடுத்து நித்யானந்தா மயக்கினார்: பெற்றோர் கதறல்

கஞ்சா கொடுத்து தன் மகனை நித்யானந்தா மயக்கி வைத்துள்ளதாக அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த காந்தி(வயது 61)- ஈஸ்வரி தம்பதியின் மகன் மனோஜ்(வயது 32). மருத்துவராக பணியாற்றி வந்த மனோஜ், தன் அக்காள் மகள் நிவேதாவுடன்(வயது 17) சில வருடங்களுக்கு முன் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரை மீட்டுத் தரும்படி பெற்றோர் கோரிக்கை விடுத்ததால்
பிடதி ஆசரிமத்தில் இருந்து மனோஜ் மற்றும் நிவேதாவை மீட்டு நீதிமன்றத்தில் பொலிசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில் நிவேதா உறவினர்களுடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் மனோஜ் மட்டும் தான் ஆசிரமத்திற்கே செல்ல விரும்புகிறேன் என கூறிவிட்டு பெற்றோரின் முகத்தை பார்க்காமல் சென்றுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத மனோஜின் பெற்றோர், 75 லட்சம் செலவு செய்து என்மகனை மருத்துவம் படிக்க வைத்தேன்.
அய்யோ.. என் மகனை கஞ்சா கொடுத்து நித்யானந்தா ஆட்கள் மயக்கி கடத்திட்டு போராங்களே.. இதை தட்டிக் கேட்க யாரும் இல்லையா? என கதறி அழுதனர். மனோஜின் பெற்றோருடைய அந்த கதறல் காட்சிகள் நீதிமன்ற வளாகத்தையே அதிர வைத்துள்ளது.
நித்யானந்தா மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள், சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில் தற்போது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளை பிரிக்கும் புது ட்ரெண்டை அவர் துவங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக