St Our Ceylon News: கொடகே தேசிய சாகித்திய விருது 2018
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

புதன், 7 பிப்ரவரி, 2018

கொடகே தேசிய சாகித்திய விருது 2018

கடந்த 17 வருடங்கள் இலங்கை இலக்கியத்தை வளர்தெடுக்கும் முகமாகவும்முன்னெடுத்துச் செல்லும் வகையிலும்வழங்கப்பட்டு வரும் கொடகே தேசிய சாகித்திய விருது இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும் கடந்த 08 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது2017ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நாவல்சிறுகதைகவிதை நூல்களில் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களில் சிறந்தவை தெரிவு செய்யப்பட்டு கொடகே தேசிய சாகித்திய விருது
வழங்கப்படவுள்ளது.

சிறந்த நாவலுக்கு ரூபா. 100000 ரூபாவும் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கு ரூபா. 25000 ரூபாவும்சிறந்த கவிதைத் தொகுதிக்கு ரூபா. 25000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
சிங்கள - தமிழ் மொழிகளில் இன ஐக்கியத்தையும்இனங்களிடையே நல்லுறவைக் கௌரவிக்கும் முகமாகச் சிங்களத்திலிருந்து தமிழுக்கும்,தமிழிலிருந்து சிங்களத்திற்கும் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஒவ்வொன்றுக்கும் இன ஐக்கியத்திற்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது வழங்கப்படும். மூலநூல் இலங்கையில் வெளியிடப்பட்டு இருத்தல் வேண்டும்.

நாவல்சிறுகதைகவிதை ஆகியதுறையில் தன் முதல் நூல் வெளியிட்ட சிறந்த படைப்பாளி ஒருவருக்கு கொடகே தேசிய சாகித்திய விருதுக்கான பணப்பரிசிலும்சான்றிதழும் வழங்கப்படும்.

அத்தோடு தமிழ் கலை இலக்கியத்திற்குப் பணியாற்றிய படைப்பாளி ஒருவருக்கு கொடகே வாழ்நாள் சாதனை விருதும் வழங்கப்படவுள்ளது.

பரிசீலனைக்கு அனுப்பப்படும் நூல்கள் முதல் பதிப்பாக இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு இலங்கையில் ISBN பெற்றுக் கொண்ட நூல்களாக இருத்தல் வேண்டும்.

பரிசீலனைக்கு நூலின் மூன்று பிரதிகள் 2018 ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக நேரடியாகவோதபால் மூலமாகவோ கீழ்fகண்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
661,651, 675, பீ. டீ.எஸ். குலரத்ன மாவத்தைகொழும்பு-10. 0112683322,04614904

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக