St Our Ceylon News: மின்சாரம் தாக்கி மரணம்!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மின்சாரம் தாக்கி மரணம்!

திருகோணமலை அத்தாபெந்திவெல - பெனிக்கிட்டியாவ வயல்பகுதியில் விவசாயியொருவரின் சடலமொன்று இன்று (28) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் ரொட்டவெவ - அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அவ்சதஹாமிகே சுகத் பிரதீப் குமார் (45) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது - சனிக்கிழமை இரவு பெனிக்கிட்டியாவ வயலுக்குக் காவலுக்காகச் சென்றபோது, வயலைப் பாதுகாப்பதற்காகச் சென்றவேளை, யானை மின் வேலியில் சிக்குண்ட நிலையில் மின்சாரம் தாக்கி, வீசப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. 

சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதுடன், சடலத்தை நீதவான் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

-அப்துல் ஸலாம் யாஸிம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக