St Our Ceylon News: புலிகளின் சொத்துக்களை விற்பனை செய்ய அரசு தயார்!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

புலிகளின் சொத்துக்களை விற்பனை செய்ய அரசு தயார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசு தயாராகி வருவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சுமார் 1.5 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் காணப்படும் காணியொன்றே இந்தச் சொத்துக்களில் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக உள்ளது.

வன்னிப் போருக்கு முன்னதாக இந்தக் காணி தொடர்பில் எவ்விதத் தகவல்களும் தெரியவரவில்லை. வெள்ளவத்தையில் அடுக்கு மாடி வீடொன்றும், அச்சகமொன்றும் இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளன. 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த பணமும் அரசுடைமையாக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

thanks: jaffna muslim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக