St Our Ceylon News: பிணைமுறி அறிக்கையின் 103 பக்கங்களுக்கு நடந்தது என்ன? - ஸிஸிர ஜெயக்கொடி
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

பிணைமுறி அறிக்கையின் 103 பக்கங்களுக்கு நடந்தது என்ன? - ஸிஸிர ஜெயக்கொடி

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இணையத்தில் வெளியிடும்போது, பிணைமுறை கொடுக்கல்  - வாங்கலுப் பொறுப்பான ஆணைக்குழு அறிக்கையின் 103 பக்கங்கள்  பதிவேற்றம் செய்யப்படாமைக்கான காரணம் என்ன? என்பது பற்றி, நாளை மறுதினம் (23) பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கேள்வி எழுப்புவோம் என எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் சென்ற டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டுள்ள, பிணைமுறி  தொடர்பிலான கொடுக்கல் - வாங்கல் தொடர்பிலான அறிக்கையின் பிரதி, சென்ற புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தின் மூலம் பாராளுமன்றத்தின் முன்வைப்பதற்காக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கையின் 103 பக்கங்கள், ஜனாபதி செயலகத்தின் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ள அறிக்கையில் இல்லை என கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பின் ஸிஸிர ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாபதி செயலகத்தின் மூலம் பொதுமக்களைத் தவறாக வழிநடாத்திச் செல்லுதல் தொடர்பில், அவசரமாக விசாரணை நடாத்த வேண்டும் என, எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கப்படும் எனவும் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)
http://divaina.com/sunday/index.php/main-news-2/1992-2018-01-19-14-12-34

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக