St Our Ceylon News: முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு நடவடிக்கை வேண்டும்! – ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை..
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 20 ஜனவரி, 2018

முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு நடவடிக்கை வேண்டும்! – ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை..

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை  ஊவா மாகாண முதலமைச்சர் முன் மண்டியிடச் செய்த விவகாரத்தில், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.
தான் மண்டியிடச் செய்தமை உண்மையே எனவும் ஊவா மாகாண கல்வித் துறை செயலாளரின்
மிரட்டலையடுத்தே அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என்று தாம் கூற நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார்.

குறித்த பாடசாலைக்கு நேற்று (19) ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விஜயம் செய்தபோதே இவ்விவகாரம் வெளியே தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக