அக்குறணையைப் பிறப்பிடமாகவும்
பிரான்ஸ் கொலேஜ் ஸைண்ட் எக்பேரியில் கல்வி கற்பவருமான ஷாமா முயிஸ், ஜெனீவாவில் அமைந்துள்ள
ஐக்கிய நாடுகள் சபையில் 34 ஆவது மனித உரிமை மாநாட்டு அமர்வில் – பெண்கள் மற்றும் சிறுவர்களின்
உரிமைகள்
பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (17) நடைபெறவுள்ள “கருத்தச் சுதந்திரம்
மற்றும் ஒன்று கூடும் உரிமை“ உப மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
பாடசாலையின் புறக்கிருத்தியச்
செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதிக திறமை காட்டிவரும் செல்வி ஷாமா, மனித உரிமைகள் செயற்பாடுகளிலும்,
வாசிப்பு – எழுத்துத் தறைகளிலும் அதிக ஆர்வம் காட்டிவருபவராவார்.
இவர், முன்னாள்
அக்குறணைப் பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் வஹாப்தீன் (வஹாப் மாஸ்டர்), அக்குறணைப் பிரபல
சமூக சேவையாளர் அல்ஹாஜ் மௌஜூத் ஆகியோரின் பேர்த்தியுமாவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக