St Our Ceylon News: கிழக்கில் ஹாபிழ்களை கௌரவிக்கும் மாபெரும் மாநாடு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 17 மார்ச், 2017

கிழக்கில் ஹாபிழ்களை கௌரவிக்கும் மாபெரும் மாநாடு

கிழக்குக்கு வௌியேயுள்ள மூத்த ஹாபிழ்களை கௌரவிக்கவும் ஏற்பாடு

கிழக்கு மாகாண ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களின்  மாபெரும் மாநாடும் அவர்களை  கௌரவிக்கும் நிகழ்வொன்றையும் நடத்துவதற்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தீர்மானித்துள்ளார்.


இதனடிப்படையில் எதிர்வரும் மே  மாத  முற்பகுதியில்  மட்டக்களப்பு ஏறாவூரில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் இலங்கையில் பல ஹாபிழ்கள் உருவாகுவதற்கு உந்துசக்தியாக அமைந்தவரும் அல்குர்ஆனை திறம்பட  மனனம்  செய்தவருமான கௌரவ அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களின் அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பல நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.

இதன்  போது கிழக்கு மாகாண ஹாபிழ் மற்றும் ஹாபிழாக்களையும் அவர்களது  பெற்றோரையும் கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்   கிழக்கு மாகாணத்துக்கு வௌியேயுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களை  கௌரவிக்கும் நிகழ்வும் இதன்  போது  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது,

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களுக்கிடையே  மனனப் போட்டிகளை  நடாத்தி  அவற்றில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளை வழங்கவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

அது  மாத்திரமன்றி கிழக்கு மாகாண ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களின் விபரங்கள்  அடங்கிய நூலொன்றை  வௌியிடவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது,

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  பள்ளிவாயல்களின் இமாம்கள்,முஅத்தின்கள்,குர்ஆன்  மத்றஸாக்களில்  கடமையாற்றும் முஅல்லிம்கள் மற்றும்  முஅல்லிமாக்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றை  நடாத்திவதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி மட்டக்களப்பு  மாவட்டத்தில் குர் ஆன் மத்ரஸாக்களில் பயிலும்  மாணவ மாணவிகளுக்கிடையிலட  போட்டிகளை நடத்தி பரிசில்களை  வழங்கவும் இதன் போது ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த  மாநாடு  தொடர்பான மேலதிக விபரங்களை  அறிந்து கொள்ளவும் கிழக்கு மாகாணத்துக்கு  வௌியேயுள்ள 60வயதுக்கு மேற்பட்ட ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களை அறியப்படுத்தவும்  “ஒருங்கிணைப்பாளர்,கிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியம் ,இலக்கம் 104,பிரதான வீதி ஏறாவூர்  என்ற முகவரியில் தொடர்பினை ஏற்படுத்த முடியும்.

அவ்வாறில்லாவிடின்  0777436168  என்ற  தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி  விபரங்களை  பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அறியத்தருகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக