St Our Ceylon News: ZOOM செயலி மூலம் சிறப்பாக நடைபெற்றது 'புகைமூட்டத்துக்குள்ளே' நூல் வௌியிட்டு விழா
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

திங்கள், 14 டிசம்பர், 2020

ZOOM செயலி மூலம் சிறப்பாக நடைபெற்றது 'புகைமூட்டத்துக்குள்ளே' நூல் வௌியிட்டு விழா

தாஹிர் நூருல் இஸ்ரா மற்றும் யோகராஜன் சுசீலா ஆகியோர் இணைந்து எழுதிய 'புகை மூட்டத்துக்குள்ளே' எனும் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் வௌியீட்டு நிகழ்வு நேற்று (13) ஸூம் செயலி வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விடிவௌ்ளிப் பத்திரிகையின் ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நூலாய்வுகள், மொழிபெயர்ப்பாளர்களின் கருத்துக்கள்,

வாழ்த்துரைகள் என்பன இடம்பெற்றன. 

நாடளாவிய ரீதியில் இலக்கியவாதிகள், அபிமானிகள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் நூல்களின் முதற்பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். 

படத்தில் நூலாசிரியைகளில் ஒருவரான தாஹிர் நூருல் இஸ்ரா மற்றும் பிரபல எழுத்தாளர் மேமன் கவி அப்துல் ரஸ்ஸாக், முஹம்மத் நௌஷாத் ஆகியோர் காணப்படுகின்றனர். 

(கலைமகன் பைரூஸ்)



(நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக