St Our Ceylon News: ஊரடங்கு பற்றிய புதிய அறிவித்தல்...!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 11 ஏப்ரல், 2020

ஊரடங்கு பற்றிய புதிய அறிவித்தல்...!

இடர் பிரதேசங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை  ஊரடங்குச் சட்டமானது நீடிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு
தளர்த்தப்பட்டு, மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுலுக்கு வரவுள்ளது.
அந்த மாவட்டங்களில் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு, மீண்டும் அதே தினம் பிற்பகல் 4 மணிக்கு  ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தாண்டுக் காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்திற்குரியது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக