St Our Ceylon News: இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வதற்குள்ள உரிமையை இல்லாதொழிக்க எவருக்கும் முடியாது! அம்ஹர் மெளலவி
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வதற்குள்ள உரிமையை இல்லாதொழிக்க எவருக்கும் முடியாது! அம்ஹர் மெளலவி

'நாங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வதற்குள்ள உரிமையை இல்லாதொழிக்க இந்நாட்டிலுள்ள எந்த ஒருவருக்கும் முடியாது' என முஸ்லிம் உலமாக்களால் அண்மையில் ஒன்றுகூட்டப்பட்ட சம்மேளனத்தில் மெளலவி அம்ஹர் ஹகம்தீன் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கு அனுமதி உள்ளது என்றும், அதனை பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் அரசின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும், அந்தத் தடையை இல்லாமற் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ நிகாபை இல்லாதொழிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், இதுதொடர்பில் இருவரும் மென்மேலும் பந்து நகர்த்துவது இஸ்லாமியரின் எல்லையைத் தாண்டச் செய்வதாக இருக்கின்றது எனவும் அவர் அபாய எச்சரிக்கை விடுத்தார்.

அவ்வாறு தொடர்ந்தும் அவர்கள் செயற்பட்டால், பந்து நகர்த்துவதற்கு இடங்கொடுக்காமல் நாங்கள் மைதானத்தை மூடிவிடுவோம். அதற்கான ஆளுமை முஸ்லிம் மெளலவிகளிடமும் ஆலிம்களிடமும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக