St Our Ceylon News: கல்முனையில் மாபெரும் போதைபொருள் ஒழிப்பு மாநாடு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

புதன், 3 ஏப்ரல், 2019

கல்முனையில் மாபெரும் போதைபொருள் ஒழிப்பு மாநாடு

கல்முனை புகைத்தல் ,போதைபொருள்  ஒழிப்பு தொடர்பாக  விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று  (1) இடம்பெற்றது .

இச் சந்திப்பானது எதிர்வரும் சனிக்கிழமை  (06) போதை பொருள் ஒழிப்பு மாகாநாடு கல்முனை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது இது தொடர்பாக கல்முனை போதைப் பொருள் ஒழிப்பு செயலணியானதுயினால்
தெளிவுட்டப்பற்றது.

இச் சந்திப்பானது பள்ளிவாசல் சம்மேளன மற்றும் செயலணியின் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அவர் அங்கு கருத்து அவர் இப் போதைப்பொருள் பாவனையானது சமூக சீரழிவை மேற்கொண்டு வருகின்றது இது எமது சமூகத்தில் மாத்திரமன்றி ஏனைய சமூகத்திற்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தோற்று வித்துள்ளது .இதனை கட்டுப்படுத்தும் முகமாக நாங்கள் உலமாக்ககள்,அரச அரச சார்பற்ற நிறுவனங்களை ஒன்றிணைத்து புகைத்தல் போதைப்பொருள் செயலணியொன்றை கல்முனையில்
 ஆரம்பித்தோம் கல்முனை பிரதேசத்தில் உள்ள 22 பள்ளிவாசல்களை ஒன்றிணைந்தும் பிரதானமான அரச நிறுவனங்கள் ஊடாக குறிப்பாக கல்முனை பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ,மீனவ திணைக்களம் மற்றும் விசேடமாக பொலிஸ் திணைக்களம் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பொது அமைப்புகள் மூலம் இச் செயற் திட்டத்தை நெறிப்படுத்த  ஒத்துழைப்பு கிடைத்தது.

இத் திட்டமானது எமது இளம் தலை முறையை போதை பாவனை தொடர்பாக விழிப்புட்டடி அதன் பாவனைகளை கட்டுப்படுத்தி ஓர் நல்ல சந்ததியாக  உருவாக்குவதாகும் .இதன் மூலம் போதையற்ற கல்முனையை உருவாக்குவதாகும் குறிப்பாக போதைபொருள் தொடர்பாக சுமார் 15 நிகழ்சி திட்டங்களை மேற்க்கொண்டுள்ளோம் தொடர்ந்தும் பல நிகழ்ச்சி திட்டங்களை நடாத்தவுள்ளோம்,அதன் அங்கமாக புகைத்தல் போதை பொருள் ஒழிப்பு மாகாநாடொன்றை எதிர்வரும்(06) காலை 8.00மணி தொடக்கம் 12.00 மணி வரை கல்முனை முகைதீன் ஜூம்மா பெரிய பள்ளிவாசளில் நடைபெறஇருக்கின்றது சுமார் 25 அரச அரச சார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கி மற்றும் பொது அமைப்புகள் குறிப்பாக வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன்  இடம்பெறவுள்ளது இதற்காக அனைவரும் கை கோர்க்க வேண்டும் என்றார்.

மேலும் இச் சந்திப்பில் புகைத்து ஒழிப்பு பேரணியின் செயலாளரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி  எம்.எச்.ரிஸ்பின் கருத்து தெரிவிக்கையில் இன்று நம் நாட்டில் பாரிய பிரச்சினையாக போதைப்பொருள் காணப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பலவேறு வேலைத்திட்டங்களை மேற்க்கொண்டு வருகின்றார்.மேலும் இப் போதை பொருள் பாவனையினால் பல சுகாதார கேடுகள் வருகிறது 30க்குமேற்ப்பட்ட  நோய்கள் வரவும் காரணமா அமைகின்றது.மேலும் 25க்கு மேற்ப்பட்ட வகையான புற்றுநோய் ஏற்ப்பட மூல காரணமாக அமைகின்றது.

குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இப்போதை பாவனை அதிகமாக உள்ளது இதனால் சமூக சீர்கேடுகள் ,பல வகையான நோய்கள் ஏற்ப்படும் இதனால் சமூகம் சீரழியும் என்ற கவலை எல்லோர் மத்தியிழும் எழுந்துள்ளது.இதனை கல்முனை பிரதேசத்தில் கட்டுப்படுத்த நாங்கள் சுமார் 6 மாதங்கள் ஈடுபட்டு வந்தாலும் கடந்த பெப்ரவரி 14 கல்முனை பிரதேசத்தில் போதைபொருள்  ஒழிப்பு செயலணியொன்றை ஆரம்பித்தோம். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் சென்று இது தொடர்பான விழிப்புணர்வை மேற்க்கொண்டோம் இதன் அடிப்படையில் பலர் எங்களிடம் இப்போதைப்பொருள் பாவனையை முற்றாக நிறுத்த எமக்கு ஆதரவை வழங்கினர்.

வியாபாரம் நிலையங்களுக்கு நேரடியாக சென்று புகைத்தல் விற்பனையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் அதற்கும் எமக்கு பெரும்பாலான ஆதரவு கிடைத்தது.இதன் மூலம் முற்றாக எமது சமூகத்தை போதை பாவனையிலிருது காப்பதாகும்.மேலும் எதிர்வரும் ஏப்ரல்( 6) நடைபெறவிருக்கும்  மகாநாட்டிக்கு அனைவரும் வருகை தந்து ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வேண்டிக்கோள்கிறேன் என்றார்.

மேலும் இவ் மாநாட்டிட்ற்க்கு பல்வேறுபட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.இந் ஊடக சந்திப்பில் செயலணியின் பிரதி செயலாளர்காளானஎன்.எம்.நெளசாத் ,எஸ்.எல்.அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-எம்.என்.எம்.அப்ராஸ்


---------------------------------------------------------------
E-mail: ceyloncnews@gmail.com
---------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக