St Our Ceylon News: அர்ஜூன அலோசியஸின் தந்தை மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கைது.
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

திங்கள், 25 மார்ச், 2019

அர்ஜூன அலோசியஸின் தந்தை மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கைது.

பிணை முறி மோசடிக்குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அர்ஜூன அலோசியஸின் தந்தை ஜெப்றி அலோசியஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி. சமரசிறியும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதற்கு மேலதிகமாக பேப்பர்சுவல் ரெசெறிஸ் இல்
இயக்குனர்களாக செயற்பட்ட புஸ்பமித்திர குணவர்த்தன, சித்திரா ரஞ்சன் குலுகல்ல , முத்துராஜா சுரேந்திரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுளனர்.

இவர்கள் யாவரும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிபார்சின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய வங்கியின் முன்னாள் ஆழுனரான அர்ஜூன மகேந்திரன் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளது. 

தேவை ஏற்படும்போது அர்ஜூன மகேந்திரனை கொண்டுவந்து பாரமளிப்பேன் என ரணில் விக்கிரமசிங்க பாரளுமன்றில் மக்களுக்கு உறுதியளித்திருந்தபோதும் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக