St Our Ceylon News: கெப் ரக வாகனமும் மோட்டர் சைக்கிளும் நேர்க்கு நேர் மோதி விபத்து!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 29 மார்ச், 2019

கெப் ரக வாகனமும் மோட்டர் சைக்கிளும் நேர்க்கு நேர் மோதி விபத்து!


- இருவர் பலத்த காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா சமர்செட் பகுதியில் 29.03.2019 அன்று கெப் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார்சைக்கிள் சாரதி மற்றும் பெண் ஒருவரும் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் – நுவரெலியா ஏ-7 பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்றும் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்களும் சமர்செட் தோட்ட பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சாரதியும், அதில் பயணித்த பெண் ஒருவரும் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், மோட்டர் சைக்களின் சாரதி மோட்டர் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக