St Our Ceylon News: ஞானசார தேரர் குற்றவாளி ; 19வருட சிறை - நீதிமன்றம் தீர்ப்பு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

புதன், 8 ஆகஸ்ட், 2018

ஞானசார தேரர் குற்றவாளி ; 19வருட சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளியாகக் கண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு 6 வருட கடூழியச்சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 குற்றப்பத்திரிகைகளுக்கும்
அதாவது நீதிமன்றத்தை  அவமதித்தமை, சிரேஷ்ட சட்டவாதியை அவமதித்தமை, நீதிமன்ற கட்டளைக்கு அடிபணியாமை, சுயாதீன நீதிமன்ற கட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்தமை போன்றவற்றில் குற்றமிழைத்திருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணதிலக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், அந்த வழக்கு விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் இன்று ஞானசாரருக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(VK)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக