St Our Ceylon News: முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு விளக்கம்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வியாழன், 19 ஜூலை, 2018

முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு விளக்கம்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து சரத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப், தனது அறிக்கை குறித்து இன்று (19) முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.

பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர்களான அலிசாஹிர் மௌலானா, எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லா, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள இதன் இரண்டாம்கட்ட சந்திப்பில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, நீதி அமைச்சின் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் வேண்டுமென ஒருசில தரப்புகள் போராடி வருகின்ற நிலையில், இஸ்லாமிய ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில் அவற்றைக்; கையாள்வதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் பல முன்னனெடுப்புகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக