பலஸ்தீனத்தில் மருத்துவ உதவிகள் புரிந்துவந்த சகோதரி ரஷான், கிழக்கு கான் யூனூஸ் பகுதியில் இஸ்ரேலிய்ய காட்டேரிகள் மேற்கொண்ட ஸ்னைப்பர் தாக்குதலில் சற்று முன்னர் மரணமானார்.
பலஸ்தீனத்தில் சுதந்திரமாக மருத்துவ உதவிகள் வழங்க பயிற்றுவிக்கப்பட்ட ரஷான் அல் நஜ்ஜர் (21 வயது)எனும் பலஸ்தீன தாதியினது நெஞ்சில் இஸ்ரேலிய்ய ஷெய்த்தானிய்யப் படையின் காட்டேரிகள் சுட்டுள்ளனர். இவர் போராட்டக்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் வழங்கி வந்த தாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்திருந்து ஸ்னைப்பர் துப்பாக்கி மூலம் ஊடகவியலாளர்களையும் மருத்துவர்களையும் கொலை செய்யும் இஸ்ரேலிய்ய காட்டுமிராண்டிகளின் கோழைத்தனத்தின் வெளிப்பாடுகளே இவ்வாறான ஈனச்செயல்களாகும்.
அல்லாஹ் இப்புனிதமான நாட்களில் எமது சகோதரியினது வீர மரணத்தை பொருந்திக்கொள்வானாக! அன்னாருக்கு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக!
Abu Ariya

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக