St Our Ceylon News: மீஸானின் இன நல்லிணக்கதை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 12 மே, 2018

மீஸானின் இன நல்லிணக்கதை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்

அல்-மீஸான் பவுண்டேஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் மூலம் வருடா வருடம் நடாத்தப்படும் சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை 14வது வருடமாகவும் அல்-மீஸான் பவுண்டேஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் அல் ஹாஜ் நூறுல் ஹுதா உமர் தலைமையில் இன்று சனிக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி மண்டபத்தில் ஒருநாள்
செயலமர்வாக இடம்பெற்றது.

இதில், அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட பாடசாலைகளை சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம், கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் விரிவுரையாளர்களாக தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் Dr.முபாரக் அப்துல் மஜீத், இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் Dr.ஸுலைமா லெப்பை ரியாஸ்,அரசியல் விமர்சகரும், தொழிலதிபருமான MHM. இப்ராஹீம் கனேடிய பல்கலைகழக சேவைகளின் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட அலுவலர் ஜேசு சகாயம், சிரேஷ்ட விரிவுரையாளர் MA.கலீல் ரஹ்மான் மற்றும் அல்-மீஸான் பவுண்டேஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூறுல் ஹுதா உமர் ஆகியோர் விரிவுரையாளர்களாக கலந்து கொண்டனர். 

மத,மொழி,பிரதேச பாகுபாடுகள் கலைந்த இலங்கையில் நல்லிணக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும் என இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

மீஸான் ஊடக பிரிவு







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக