St Our Ceylon News: பாரி குறுந்திரைப்பட வெளியீடு
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வியாழன், 10 மே, 2018

பாரி குறுந்திரைப்பட வெளியீடு


தென் இலங்கையின் முதல்தர தமிழ் குறுந்திரைப்பட கூட்டுத்தபனமான Mass Media தனது 4வது குறுந்திரைப்படமான “பாரி”யை 12.05.2018 காலை 06.30 மணிக்கு தமது உத்தியோகபூர்வ YouTube Channel ஆன “Mass Media Sri Lanka“வில்  வெளியிடவுள்ளது.
நாட்டுகாக போராடிய ஓர் இராணுவவீரன் தனது மகனை வளர்க்க போராடுகின்ற ஓர் போராட்டமே இக்கதையின் கருவாக அமைந்துள்ளது . வில்பிட்ட காடு  அதனை அண்டிய குளம் மற்றும் கொடபிடிய கிராமத்தின் எழில்மிகு வயல் மற்றும் மலைப்பகுதிகளில் ஒளிப்பதிவு இடம்பெற்றுள்ளது. படத்தின் கதையைப் பொருத்தவரை பாரிக் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

சிமாஸ் ஹுஸைனின் இயக்கத்தில் இடம்பெறும் இக்கதையை பஸில் ஹுஸைன் எழுதியுள்ளார். மேலும் முஹம்மத் முன்ஸிப், சிமாஸ் ஹுஸைன் ஆகியோர் இக்கதையின் ஒளிப்பதிவாளர்களாக (Camera Man) தொழிற்படுகின்றனர், அழகிய முறையில் VFX பயன்படுத்தப்பட்டுள்ளது.
முஹம்மத் பாரிக், அப்துல் வாஹித், அப்துல் அஸீஸ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் அதேவேளை துணைக் கதாப்பாத்திரங்களில் முன்ஸிப், சிமாஸ் , பஸில் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே அன்புள்ள அப்பா, ஸதகா, Result ஆகிய மூன்று குறுந்திரைப்படங்களில் நடித்துள்ள பாரிக் அவர்கள் இதில் தென்னிந்தியா திரைப்பட நடிகர்களைப் போன்று சில காட்சிகளில் நடித்துள்ளார்.
இக்கதையின் முன்னோட்டம்  (trailer) வெளியானது முதல் குறுந்திரைப்படம் வெளியாகும்வரை தமது ஆலோசனைகளை வழங்கி ஆர்வமூட்டிய நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், ஊர் மக்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை Mass Media நிர்வாகத்தினர் தெரிவித்துகொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக