St Our Ceylon News: சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

திங்கள், 30 ஏப்ரல், 2018

சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

(க.கிஷாந்தன்)
பத்தனை போகாவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 10 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் 29.04.2018 அன்று காலை 11 மணியளவில் கைது செய்யபட்டுள்ளார்.
திம்புள்ள பத்தனை பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதுடன் 10 மதுபான போத்தல்களும் மீட்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது.
வெசாக் பூரணையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் நாட்களில் விற்பனை செய்வதற்காகவே குறித்த வீட்டில் இந்த மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கபட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக