குறிப்பாக 2௦18 ஏப்ரல் மாதத்தை அவதானித்தால் இலங்கை முஸ்லிம் பெண்கள் தமது உரிமையை பாதுக்காக்க தனியாகவும், குழுவாகவும் இறங்கியுள்ளதை அவதானிக்கலாம்.
அரச கரும மொழியாக உள்ள தமிழை பயன்படுத்தாமல் சிங்கள மொழி மூலம் தமது கருமங்களை பெரும்பாலும் செய்கின்ற ஓர் மாகாணமே தென்மாகாணம். இவ்வாறு தமிழ் மொழி தெற்கில் புறக்கணிக்கும் சந்தர்பத்தில் தமது உரிமையை நிருபிப்பதற்காக காலி மாநக சபை கன்னியமர்வில் தமிழ் பேசும் முஸ்லிம் பெண் உறுப்பினரான றிஹானா மஹ்ரூப் தமிழ் மொழி பெயர்ப்பு உரிமையை கேட்டு பெரும் அமளி துமளிக்கு மத்தியில் அங்கு தமது உரிமையை பெற்றுக்கொண்டார்.
முஸ்லிம் பெண்களின் கலசார உடையான ஹபாய அணிய வேண்டாம் என்று சண்முக இந்துக் கல்லூரியில் பல ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட நிலையில் தமது உரிமையை வென்றெடுக்க குழுவாக இணைந்து முஸ்லிம் பெண் ஆசிரியர்களான பௌமிதா, சஜானா, ஷிபானி, ஆகியோர் தமது கணவர்மார்களின் அனுசரணையுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம் ஆண்களை மாத்திரம் உறுப்பினராகக் கொண்ட பாராளுமன்றம் மற்றும் உலமா சபை என்பன தமது பட்டம் பதவியை நிலைநிறுத்த அடிக்கும் போதெல்லாம் அடி வாங்கு நாம் வாழ்வது ஹிஜ்ரத்திற்கு முன்னால் உள்ள மக்கா காலம் என கூறுகின்றனர். அல்லது அடி பட்ட பின்னரும் ஐ. நாவில் போய் நமக்கு இலங்கையில் அடிப்பதில்லை என்று நீதியமைச்சர்களாக இருந்து கொண்டு நீதியை???
நிலை நாட்டுகின்றனர். இவ்வாறு முஸ்லிம் சமூக வாழ்வுரிமையை தமது சுய நலத்திற்காக இனவாதிக்கும் அரசுக்கும் விற்கின்ற ஓர் தலைமைத்துவத்தின் கீழ்தான் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக