St Our Ceylon News: எனக்கு சுதந்திரக் கட்சி தேவையில்லை.. நான் மொட்டை வளர்த்தெடுப்பேன்! - மஹிந்த
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

எனக்கு சுதந்திரக் கட்சி தேவையில்லை.. நான் மொட்டை வளர்த்தெடுப்பேன்! - மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பும் தேவை தமக்கு இல்லையென்றும், எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஊக்குவிக்கவே தான் செயற்படவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச்
செய்துகொண்ட 16 அமைச்சர்கள் தன்னைச் சந்திக்க வந்தவேளையிலேயே அவர், அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் முன்னெடுத்துள்ள அரசியலுக்கு 50 இலட்சம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதை தான் சென்ற உள்ளுராட்சித் தேர்தலில் கண்டதால், தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடட்டும் எனவும், அதற்காக தான் ஆசிர்வதிப்பதாகவும் தெளிவுறுத்தியுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், எதிர்காலத்தில் கூட்டணியொன்று அல்லது முன்னணியொன்று உருவாவதற்காக அறிகுறிகள் திறந்த நிலையில் உள்ளதெனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

(கேஎப்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக